பொத்துவில் பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

அகமட் எஸ். முகைடீன்-
ராஜாங்க அமைச்சர் ஹரீஸினால் பொத்துவில் பிரதேசத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்தி முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் சனிக்கிழமை (26) பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாசித் தலைமையில் பொத்துவில் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் வேண்டுகோளுக்கமைவாக ஏற்பாடு செய்யப்பட்டு அவரது பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபை பிரதி தவிசாளர் பெருமாள் பார்த்திபன், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்களான முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.எம். மர்சூக், எம்.எச். கியாஸ், ஏ.எல். ஜுனைதா உம்மா, எஸ்.ரி. சபூறா உம்மா, எஸ். பகூர்டீன் மற்றும் சட்டத்தரணி எம்.சி. பைசல், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொத்துவில் இளைஞர் அமைப்பாளர் பி. பசூர்கான், பொத்துவில் பிரதேச பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்கள் ஆகியவற்றின் நிர்வாக சபை உறுப்பினர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரதேசவாசிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

அரசாங்கத்தினால் மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ள கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் பொத்துவில் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்களின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்களின் பெயர்ப் பட்டியலை பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்கள் தயாரித்து விரைவாக வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும் மாகாண சபைகள் மற்றும் ஊள்ளூராட்சி அமைச்சின் ஊடக பல்வேறு உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அந்தவகையில் பொத்துவில் பிரதேசத்தில் நான்கு அல்லது ஐந்து வீதிகளை காபர்ட் வீதிகளாகவும் உள்ளக வீதிகளை கொங்றீட் வீதிகளாகவும் புனரமைப்புச் செய்ய முடியுமெனவும் பொத்துவில் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திகளையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். அந்தவகையில் குறித்த அபிவிருத்திப் பணிகளுக்கான முன்மொழிவுகளை பிரதேச சபை உறுப்பினர்கள் மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்தோடு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் திண்மக் கழிவகற்றும் செயற்பாட்டிற்காக கொள்வனவு செய்யப்பட்டுள்ள வாகனங்களில் இரண்டு டம்ப் ரெக் வாகனங்களை பொத்துவில் பிரதேச சபைக்கு ஒதுக்கீடு செய்யுமாறு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் இவ்வாகனங்களுக்கான தேவைப்பாடு தொடர்பில் தவிசாளர் அப்துல் வாசித் தனது கவனத்திற்கு கொண்டுவந்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -