ஆட்சியை தீர்மானிக்கின்ற மாபெரும்சக்தியாக த.தே.கூட்டமைப்பு:



தமிழ்மக்களை ஏமாற்ற நினைத்தால் மறுகணம் ஆட்சிகவிழும்:
அம்பாறை தமிழ்வைத்தியசாலைகள் முற்றாக புறக்கணிப்பு:
அம்பாறை தமிழ்மக்களின் விலை 50கோடியா? முடியாது:
தீர்வு கிடைக்கும்வரை தமிழர்கள் தொடர்ந்து போராடுவர்!
காரைதீவில் த.தே.கூட்டமைப்பின் எம்.பி. கோடீஸ்வரன் சூளுரை!
காரைதீவு சகா-

ந்த நாட்டின் ஆட்சியை நிலைநிறுத்துவதிலும் வீழ்த்துவதிலும் தீர்மானிக்கின்ற பிரதான சக்தியாக எமது தமிழ்மக்களின் ஏகப்பிரதிநிதியாகிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு திகழ்வதையிட்டு நாம் பெருமையடையவேண்டும்.
இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன்கோடீஸ்வரன் தெரிவித்தார்.
காரைதீவுப்பிரதேச அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கான முன்மொழிவுகளை கேட்டறியும் ஊர்ப்பொதுக்கூட்டம் நேற்று(22) மாலைகாரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
த.தே.கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ச.சுரேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள் தத்தமது தேவைகள் பிரச்சினைகள் பற்றி எடுத்துரைத்தனர்.
கூட்டத்தில் த.தே.கூட்டமைப்பின் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் உறுப்பினர்களான த.மோகனதாஸ் ச.நேசராசா சி.ஜெயராணி ஆகியோரும் சமுகமளித்திருந்தனர்.
அங்கு கோடிஸ்வரன் எம்.பி. மேலும் பேசுகையில்;:
கடந்காலங்களில் வடக்கு கிழக்கு மக்கள் அபிவிருத்தியில் பாரிய பின்னடவைச்சந்தித்திருந்தார்கள்.
இன்று நாட்டில் புதிய சாதகமான சூழலொன்று உருவாகியுள்ளது. அதனூடாக பாரிய அபிவிருத்திகளைச்செய்ய வழிபிறந்துள்ளது.அதற்கு வித்திட்டது தமிழ்மக்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியாகட்டும் ஜக்கிய தேசிய முன்னணியாகட்டும் எந்தக்கட்சியானாலும் ஆட்சியைத் தீர்மானிக்கின்ற சக்தி நாமே.
அதேபோல வடக்கு கிழக்கு தமிழ்மக்களின் அபிலாசைகள் தீர்வுகள் புறக்கணிக்கப்படுமானால் தகுந்த பதிலடி கொடுக்கவும் தயங்கமாட்டோம். அதாவது ஆட்சியை கீழிறக்கவும் தயங்கோம்.

கடந்தகாலங்களில்நாட்டில் நிலவிய கொடுங்கோல் கொடுரஆட்சியை கவிழ்த்த பெருமையும் வீட்டுக்கு அனுப்பியபெருமையும் தமிழர்க்குண்டு. அதில் பாதிக்கப்பட்ட சக்திகள் இன்று எம்மால் உருவான ஜனாதிபதியுடன் சேர்ந்து தமிழர்தீர்வுகளை எதிர்க்கத்தலைப்பட்டுள்ளன. எனினும் மக்களை ஏமாற்ற அனுமதிக்கமுடியாது. ஏற்றுக்கொள்ளவும் முடியாது.

எமக்கான தீர்வுத்திட்டம் தயாராகிவருகிறது. அதனை முழுமையாக நிறைவேற்ற உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் எமது கூட்டமைப்பு முழுச்சக்தியுடன் போராடும்.
த.தே.கூட்டமைப்பு எம்.பிக்களை விலைபேச வந்தார்கள் முன்னாள ஆட்சியாளர்கள். என்னிடம் வந்தார்கள் 50கோடி தருவதாகவும் அமைச்சுப்பதவி தருவதாகவும் சொன்னார்கள். உங்களின்பெறுமதி 50கோடியா? அதற்கு விலைபோக நான் என்ன மானம்கெட்ட தமிழனா?
காரைதீவில் கட்சிபேதமின்றி அனைவரும் ஒற்றுமையாக இயங்கினால் பல கோடிருபா பெறுமதியான பிரதேச வேலைத்திட்டங்களை முன்னெடுக்கலாம். கூரைகளைத்திருத்த 40ஆயிரம் ருபா தொடக்கம் 1லட்சம் வரையில் மானியமாக 200பேருக்கு வழங்கதிட்டமிட்டுள்ளோம்.மலசலகூடமில்லாதவர்களுக்கு அவற்றை வழங்க திட்டமிட்டுள்ளோம்.
தமிழ் வைத்தியசாலைகள் முற்றாக புறக்கணிப்பு!
அம்பாறை மாவட்ட தமிழ்ப்பிரதேச வைத்தியசாலைகள் அனைத்தும் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுவருகின்றன. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தொடர்ச்சியாக பல புறக்கணிப்புகளை செய்துவருகிறது.
நேற்றுகிழக்கில் வழங்கப்பட்ட அம்புலன்சில் ஒரு அம்புலன்ஸ்கூட தமிழ்ப்பிரதேச வைத்தியசாலைக்கு வழங்கப்படவில்லை. வளப்பங்கீடு மட்டுமல்ல சகலவற்றிலும் பச்சைப்பாரபட்சம் காட்டப்படுகின்றது.எதிலும் புறக்கணிப்பு. கல்முனைக்குகீழ் வைத்து இதனை ஆதாரவைத்தியசாலையாக தரமுயர்த்துவதில் ஒரு பிரயோசனமுமில்லை.
காரைதீவுச்சமுகம் விரும்பினால் காரைதீவு பிரதேச வைத்தியசாலையை அம்பாறை பி.சு.சே.பணிப்பாளர் அலுவலகத்துடன் இணைக்க நடவடிக்கை எடுப்பேன். ஏன் முடிந்தால் மாவட்டத்திலுள்ள சகல தமிழ்வைத்தியசாலைகளையும் அம்பாறையுடன் இணைத்தால் நல்லது. சிந்தியுங்கள்.
10ஆலயங்களுக்கும் தலா 5லட்சருபா வீதம் தருகிறேன். இரு பிரதான விளையாட்டுக்கழகங்களுக்கு தலா 20லட்சருபா தருகிறேன். சண்முகாவிற்கு 10லட்சருபா வழங்கப்படுவதோடு விபுலாநந்தா மத்தியகல்லூரியை தேசிய கல்லூரியாக தரமுயர்த்த நடவடிக்கை எடுப்பேன். என்றார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -