போதையற்ற சமூகத்தை உருவாக்கி எதிர்கால சந்ததியை காப்போம்.....


லங்கை திருநாட்டின் மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் சிந்தனையின் கீழ் ஜனாதிபதி செயலகம் மற்றும் கல்வியமைச்சு முன்னெடுத்திருக்கும் போதை ஒழிப்பு நடவடிக்கையின் அங்கமாக ஜனவரி 21ம் திகதியில் இருந்து 25ம் திகதி வரை நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் போதை ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தி பாடசாலை மாணவர்களிடையே பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை அமுல்படுத்துகிறது.பாடசாலை மட்டத்திலிருந்து இவ்வாறான திட்டங்களை அமுல்படுத்தி எதிர்கால சந்ததியினை போதையற்ற சமூகமாக மாற்றியமைக்க வேண்டுமென ஜனாதிபதி மற்றும் கல்வியமைச்சர் ஆகியோர் முன்னெடுத்திருக்கும் திட்டம் வரவேற்க்கத்தக்கது.

கடந்த 10 ஆண்டுகளோடு ஒப்பிடும் போது போதைப் பொருள் பாவனையானது பாடசாலை மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.வெளிநாடுகளில் இருந்து சட்டபூர்வமற்ற முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்படும் போதைப் பொருட்களின் இலக்கு சந்தையாக பாடசாலை மாணவர்களே உள்ளார்கள் என்பது அதிர்ச்சி மிக்க ஆய்வுத் தகவலாகும்.நாட்டிற்கு சட்டரீதியற்ற முறையில் கொண்டுவரப்படும் போதைப் பொருட்கள் நாட்டில் உள்ள பாடசாலை சுற்றுச் சூழலை அண்மித்த பகுதிகளிலே முகவர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.அண்மைக் காலங்களில் அவ்வாறான முகவர்களை இலங்கை பொலிஸார் கைது செய்து மேற்கொண்ட விசாரணைகளின் போது அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களில் படி வெளியிட்ட அறிக்கை மூலம் விளங்கிக் கொள்ள முடியும்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் சிகரட் வகைகள் மாத்திரமே அதிகளவான பாவனையில் இருந்தது.அதனோடு சேர்த்து கிராமப் புறங்களில் உள்ள நாட்டுச் சாராயங்களும் போதைக்காக பயன்படுத்தப்பட்டது.ஆனால் இன்றைய காலகட்டத்தில் பயன்படுத்தப்படும் போதைப் பொருட்கள் பல வகையான பெயர்களை கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
1.CANNABIS,
2.SOLVENTS,
3.ECSTASY,
4.LSD,
5.COCAINE,
6.HEROIN,
7.TRANQUILLISERS,
8.ANABOLIC STEROIDS, Etcc.....இவ்வாறு பல பெயர்களை கொண்ட போதைப் பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அவை மாணவர்கள் மத்தியில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.
காலை வேளையில் செய்திப் பத்திரிகைகள்,மற்றும் சமூகவலைத்தளங்களை பார்க்கின்ற போது மாணவர் கொலை,கற்பழிப்பு,களவு,தற்கொலை,விபத்து என அதிகளவான செய்திகள் வெளியிடப்படுகின்றன.குறித்த குற்றச் செயல்கள் அனைத்திற்கும் காரண கர்த்தாவாக இருப்பது போதைப் பொருட்கள் பாவனையாகும்.எனவே போதைப் பொருள் பாவனையை முதலில் பாடசாலை மட்டத்தில் இருந்து பிடுங்க வேண்டிய தேவை உள்ளது.அதற்காக ஜனாதிபதி செயலகமும்,கல்வியமைச்சும் முன்னெடுத்திருக்கும் இவ்வாறான செயற்திட்டங்கள் வெற்றியளிக்க வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளோடு ஒப்பிடும் போது போதைப் பாவனை அதிகரித்தமைக்கு பல காரணங்களை கூற முடியும் இருந்த போதிலும் அதில் முக்கிய காரணங்களில் ஒன்றாக பாடசாலை மாணவர்களிடையே இருந்த விளையாட்டு ஆர்வம் குறைந்து அதற்கு செலவிடும் நேரத்தை தவறான போதைப் பொருள் பாவனைக்கு செலவிடுகிறார்கள்.

விளையாட்டு என்பது ஒரு மாணவனின் உடல்,உள ரீதியான விருத்தியை ஏற்படுத்துகிறது.கடந்த 10 ஆண்டுகளோடு ஒப்பிடும் போது பாடசாலை ரீதியாக மாணவர்கள் தேசிய,மாகாண மட்டங்களில் விளையாட்டின் மூலம் படைத்த சாதனைகள் குறைந்துள்ளது.பாடசாலை ரீதியில் நடைபெற்ற தனிநபர் நிகழ்ச்சியில் படைக்கப்பட்ட பல சாதனைகள் கடந்த 10 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத நிலையில் உள்ளது.தொழிநுட்ப வளர்ச்சி,வளங்கள் என்பன இருந்தும் தனிநபர் சாதனைகள் முறியடிக்கப்படாமல் இருப்பதற்கான முக்கிய காரணமாக மாணவர்களிடத்தில் உடல்ரீதியான பலம் குன்றியுள்ளது என்பது ஆய்வுகளின் மூலம் அறியமுடிகிறது.
எனவே போதையற்ற சிறந்த எதிர்காலச் சமூகத்தை உடல்,உள ரீதியாக விருத்தி செய்ய மாணவர்களின் செயற்பாடு மற்றும் ஆர்வத்தினை விளையாட்டின் பக்கம் திருப்ப வேண்டும்.பாடசாலைக் கல்வி தவிர்ந்த நேரங்களை அவர்கள் வீணான வழிகளில் செலவிடுவதை நிறுத்தி அந்நேரங்களை மைதானங்களில் கழிப்பதற்கு ஊக்கப்படுத்தி,அவர்களுக்கான உளவள ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
போதையற்ற மாணவச் சமூகத்தை உருவாக்கவும்,மாணவர்களின் கவனத்தை விளையாட்டின் பக்கம் செலுத்தி,சிந்தனைகளை மாற்றி,அவர்களிடம் உள்ள விளையாட்டு திறமைகளை கண்டறிந்து விருத்தி செய்து எமது நாட்டின் பெருமைகளை சர்வதேச ரீதியில் மிளிர செய்ய தெரிவு செய்யப்பட்ட 3850 பயிற்றுவிப்பாளர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென அகில இலங்கை தெரிவு செய்யப்பட்ட பாடசாலை பயிற்றுவிப்பாளர் சங்கம் தெரிவு செய்யப்பட்டோரிடம் வேண்டுகோள் விடுக்கிறது.

போதையற்ற எதிர்காலச் சமூகத்தை உருவாக்க இன்றே வித்திடுவோம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -