மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் கலாபூஷணம் விருது பெறுகின்றார்.


ருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் கலாபூஷணம் விருது பெறுகின்றார்.நாளை 29அம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு தாமரைத் தடாக மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்விலேயே இவருக்கு இந்த கலாபூஷணம் விருது வழங்கப்படவுள்ளது.

2010ஆம் ஆண்டு இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனமும்,பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இணைந்து நடாத்திய போட்டியில் ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளுக்காக சிறந்த பத்திரிகையாளருக்கான சுப்ரமணிய செட்டியார் தேசிய விருதை வென்ற முதல் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்ற பெருமை இவரையே சாரும்.
அதே போன்று 2012ஆம் ஆண்டு இங்கை பத்திரிகை ஸ்தாபனமும்,இலங்கை பத்;திரிகை ஆசிரியர் சங்கமும் இணைந்து நடாத்திய போட்டியில் மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் 'விலேஜ் விசிட்'என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகளுக்காக சிறந்த சூழலியல் செய்தியாளருக்கான தேசிய விருதுதையும் இவர் வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் 2018ஆம் ஆண்டின் ஊடகத்துறைக்கான கிழக்கு மாகாண வித்தகர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.இவை தவிர இன்னும் பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
இவர் தென்னிந்தியாவைச் சேர்ந்த மர்ஹூம் பத்துமுகம்மது ராவுத்தர் பீர்முகம்மது மருதமுனையைச் சேர்ந்த இஸ்மாலெப்பை ஆமினா உம்மா தம்பதியின் இரண்டாவது புதல்வராவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -