என் மரணத்திற்கு காரணம் வைத்தியரும், அவரது மனைவியும் தான் என தெரிவித்துவிட்டு யுவதி தற்கொலை

க.கிஷாந்தன்-
ட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் டன்பார் வீதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் சில வருட காலம் தாதியாக தொழில் செய்து வந்த 22 வயதுடைய யுவதி ஒருவர் அதிகளவிலான மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று 27.01.2019 அன்று இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த யுவதியான முருகையா சாந்தினி 22 வயதுடைய தலவாக்கலை வட்டகொடை யொக்ஸ்போர்ட் தோட்டத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
குறித்த யுவதி 27.01.2019 அன்று இரவு வேளையில் குறித்த மருத்துவமனையிலேயே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக உறவினர்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதுடன், பொலிஸார் சம்மந்தபட்ட வைத்தியசாலையின் வைத்தியரை விசாரணைக்குட்படுத்திய போதிலும், முறையான விசாரணைகள் மற்றும் கைது நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வைத்திய அதிகாரி தவறான முறையில் நடந்த கொள்ள முயற்சித்ததாகவும், வைத்திய அதிகாரியின் மனைவியும் கொடுமைப்படுத்தியதாகவும், இதனாலையே தான் அதிகளவிலான மாத்திரைகளை உட்கொண்டு இறக்க போவதாகவும் என்னை யாராலும் காப்பாற்ற முடியாது எனவும் எனது இறப்புக்கு வேறு யாரும் காரணம் அல்ல. வைத்தியரும் அவரது மனைவியும் தான் என்று குரல் பதிவு செய்த ஒலி கோவை ஒன்று உறவினர்களிடம் உள்ளது.
அந்த குரல் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
உயிரிழந்த யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டு, 29.01.2019 அன்று அவரின் இறுதி கிரியைகள் மேற்படி தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

அத்தோடு, உயிரிழந்த யுவதியின் பெற்றோர்கள் சம்மந்தப்பட்ட வைத்திய அதிகாரி கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கின்றனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -