கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்களை வைத்து அரசியல் செய்யவேண்டாம்...!


ஹொரவப்பொத்தானை, கிரலாகல தொல்பொருள் வனப்பகுதியில் உள்ளதூபியின் மீது சப்பாத்து காலுடன் ஏறிநின்று அவமதித்தார்கள் என்றஅடிப்படையில் அவர்களாகவே முகநூலில் தரவேற்றிய புகைப்படம் ஒன்றைஆதாரமாக வைத்து அண்மையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இறுதிதிஆண்டு மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் பெப்ரவரி 5 திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில்.

இவர்கள் இவ் விடயத்தை அறியாமல் புரியாமல் செய்து இருக்கலாம்.

இவர்களுடைய விடயத்தில் இப்போது சமூக ஊடகங்களில் வீராப்பு பேசிகொண்டு அறிக்கை விடும் அரசியல்வாதிகள் ஆரம்பத்தில் இவ்விடயத்தில்தலையிட்டு இருந்தால் இந்த பிரச்சினையை சுமுகமாக தீர்த்து இருக்கலாம்.
இப்போது இப் பிரச்சினை நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில்.
வீராப்பு பேசி கொண்டு சமூக ஊடகங்களிள் அரசியல்வாதிகள் ஒருவர் மாறிஒருவர் அறிக்கை விடுகின்றனர்.
இது அல்ல இப்போதைய தேவை இம் மாணவர்கள் இறுதி ஆண்டு பல்கலைக்கழகத்தில் உள்ளவர்கள் இவர்களின்வாழ்க்கையில் முக்கியமான கட்டம் இது. இந்த நேரத்தில் இப்படி ஒரு நிலை ஏற்பட்டு இருக்கிறது இவர்களுக்கு. இவர்கள் அறியாமல்,புரியாமல் செய்து இருக்கலாம்.
ஆகவே தயவுசெய்து இந்த விடயத்தை வைத்து அரசியல் செய்யாமல். இவர்கள் உங்களுடைய பிள்ளைகள் என்ற உணர்வுகள்யுடன் இறைவனுக்குபயந்து இவர்களுக்கு உதவு முடியுமாக இருந்தால் உதவுங்கள்
இல்லை என்றால் அறிக்கை விடாமல் அமைதியாக இருங்கள்.

-றிஸ்கான் முகம்மட்
தலைவர் ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா சமூக சேவைகள் அமைப்பு.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -