கல்வியும் விளையாட்டும் மாணவச்செல்வங்களின் உயிர்மூச்சாக இருக்கட்டும்

ன்/காக்கையன்குளம் மு.ம.வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வில் கெளரவ காதர் மஸ்தான் உரை.
கல்வியைப் போன்றே விளையாட்டும் எமது வாழ்வில் இன்றியமையாத அம்சமாகும்.
விளையாட்டுக்கள் மூலம் உடலும் மனமும் ஆரோக்கியமடைவது மாத்திரமன்றி ஐக்கியம் விட்டுக்கொடுப்பு, சகிப்புத்தன்மை,புரிந்துணர்வு என சமூகவுணர்வுகள் எம்மிடம் ஏற்படுகின்றன.
இவ்வாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி முன்னால் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் குறிப்பிட்டார்.
பாடசாலை அதிபர் ஜனாப். ஏ.எம்.சாக்கீர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அவர் மேலும் கூறியதாவது.
இணைப்பாடவிதான செயற்பாடுகளில் கல்வி மிகப் பிரதானமானது என்பதை பெற்றோர் உணர்ந்து செயற்பட வேண்டும்.
ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதில் விளையாட்டுக்களின் வகிபாகத்தை சுட்டிக்காட்ட விழையும் அதேவேளை அது எமது நாட்டின் அபிவிருத்தியிலும் தன்னிறைவிலும் பாரிய பங்களிப்பை நல்குகின்றது என்பதையும் குறிப்பிட்டுக் கூற விரும்புகிறேன்.
நான் பிரதி அமைச்சராக பதவி வகித்த குறுகிய காலத்தினுள்ளே கிட்டத்தட்ட ஐந்நூறு மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்திகளை செய்திருக்கின்றேன்.
இதில் கணிசமான அளவு கல்விக்கும் விளையாட்டுக்கும் செலவிடப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் எ. சந்தியோகு முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ முத்தலிபாவா பாறுக் ஐ.எஸ்.ஆர்.ஸி பனிப்பாளர் ஜனாப்.மிஹ்லார் மற்றும் மடு வலயக் கல்விப் பணிமனை அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -