ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி காரைதீவுபிரதேசசபை உறுப்பினர் காண்டீபன் உரை!
காரைதீவு சகா-இந்தக்கணக்கறிக்கை மிகவும் தெளிவாக பிழையின்றி உள்ளது. எனினும் உனது கட்சியின் அழுத்தம் காரணமாகவும் எனது கட்சியைச்சேர்ந்த உபதவிசாளர் நடுநிலைவகித்த காரணத்தினாலும் சபைக்கும் எனது மக்களுக்கும் விசுவாசமில்லாமல் நடுநிலைவகிக்கவேண்டிய துர்ப்பாக்கிய கையறுநிலையிலிருக்கிறேன். அதாவது மனச்சாட்சிக்கு விரோதமாக நடுநிலைவகிக்கிறேன். என்றார்.
இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் காரைதீவுபிரதேசசபை உறுப்பினர் முத்துலிங்கம் காண்டீபன் சபையில் உரைநிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.
கணக்கறிக்கைக்கான வாக்கெடுப்பில் தான் ஏன் நடுநிலை வகித்தேன்? என்பது தொடர்பில் ஸ்ரீல.சு.கட்சி உறுப்பினர் மு.காண்டீபன் கூறுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
காரைதீவு பிரதேசசபையின் கடந்த மார்கழிமாதக் கணக்கறிக்கை 9வாக்ககளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. நடுநிலையாக 3வாக்குகள் அளிக்கப்பட்டன.
காரைதீவு பிரதேசசபையின் 11வது மாதாந்த அமர்வு தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் சபாமண்டபத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றபோதே இத்தீர்மானம் எட்டப்பட்டிருக்கிறது.
கணக்கறிக்கை தொடர்பில் முன்னதாக உபகுழுக்கூட்டம் நடைபெற்றது. அதில் செயலாளர் நிதிஉதவியாளர் அது தொடர்பாக பூரணவிளக்கமளித்தனர். சபைஉறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டனர்.
அடுத்த சில நிமிடங்களில் சபை கூடியதும் கணக்கறிக்கை சமாப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. அப்போது
உபதவிசாளர் எ.எம்.ஜாகீர் ஆ.பூபாலரெத்தினம் மு.காண்டீபன் ஆகியோர் நடுநிலை வகித்து வாக்களித்தனர்.
ஏiனைய தவிசாளர் ஜெயசிறில் மற்றும் எம்.எச்.எம்.இஸ்மாயில் முஸ்தபா ஜலீல் எ.ஆர்.எம்.பஸ்மீர் என்.எம்.றணீஸ் ச.நேசராசா த.மோகனதாஸ்; இ.மோகன் எஸ்.ஜெயராணி ஆகியோரின் 9வாக்குகள் சாதகமாக போடப்பட்டது.
தவிசாளர் கி.ஜெயசிறில் அங்கு மேலும் கூறுகையில்:
கடந்த கணக்கறிக்கையில் எவ்வத தவறுமில்லை பிழையுமில்லை. தவறுதலாக ஒருசில எழுத்துப்பிழைகளுள்ளன.அவ்வளவுதான். இதனை குழப்பத்திற்குள்ளாக்கப்பார்த்தார்கள். முடியவில்லை. அதற்கான பூரண விளக்கத்தை உரிய செயலாளரும் நிதிஉதவியாளரும் வழங்கினர்.
எனவே நாம் இங்கு சுயநலஅரசியல் செய்யாது மக்கள் பிரதிநிதிகளாகச் செயற்படுமாறு மீண்டும் தயவாக வேண்டுகிறேன்.