கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் குழுவை விடுதலை செய்வது தொடர்பாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் தொல்பொருளியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட உயர் மட்டத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றார்.
குறித்த மாணவர்கள் அவமதிப்பை ஏற்படுத்தும் நோக்கின்றி புரியாமையினால் ஏற்பட்ட அச்சம்பவத்தினால் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோர் இராஜாங்க அமைச்சர் ஹரீஸை தொடர்புகொண்டு அம்மாணவர்களை விடுதலை செய்வது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் குறித்த மாணவர்களை கைது செய்த ஹொரவபொத்தான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரிகள் மற்றும் அனுராதபுரத்திலுள்ள சிரேஷ்ட சட்டத்தரணிகள் ஆகியோருடனும் தொடர்புகொண்டு குறித்த மாணவர்களின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.