வத்தளை ஹெந்தரமுல்ல ரோசிலா காடன்ஸ் அகதியத்துல் பிர்தௌசியா பாடசாலை மாணவா்களது பரிசளிப்பும் மாணவா்களது நிகழ்ச்சிகளும் வத்தளை நகர மண்டபத்தின் மண்டபத்தில் கல்லுாாி அதிபா் அஹமட் ஹஸ்னி பெரோஸ் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மேல் மாகாண சபை உறுப்பிணா் மொஹமட் பாயிஸ் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தாா். இந் நிகழ்வில் ஜம்மியத்துல் உலமா கல்விப் பிரிவு அஷ்ஷேக் எம் நமீஸ் செய்யத் இப்றாஹீம் அஷ்ஷேக் ருமான் ஓமா் ரோசிலா காடன்ஸ் அகதியா பாடசாலையின் தலைவா் எம் ்மின்ஹாா் முன்னாள் தலைவா் கமால்டீனும் கலந்து கொண்டு உரையாற்றினாா்கள்.