குடி நீரில் அதிகளவு ப்லோரைட் பதார்த்தம் அடங்கிய பிரதேசமான அனுராதபுரம்தலாவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வராகொட கிராமத்து மக்கள் மிக நீண்ட காலமாக சுத்திகரிக்கப்பட்ட குடி நீரை பெற்றுக்கொள்ள முடியாமல் பலசிறமங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர். சுத்திகரிக்கப்படாத குடி நீரைபயன்படுத்துவதன் மூலம் சிறு நீரக நோயால் பாதிக்கப்படும் மக்களின் அளவும்அக்கிராமத்தில் அதிகளவாகவே காணப்படுகின்றது.
அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின்பன்முகப்படுதப்பட்ட நிதியிலிருந்து 2019.01.27 அன்று குறித்த கிராமத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மற்றும் நீர்த்தாங்கிகள் என்பன வழங்கி வைக்கபட்டது.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதியக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்இஷாக் ரஹுமான் அங்கு உரையாற்றுகையில்,
இலங்கை நாட்டில் அதிகளவான சிறு நீரக நோயாளிகள் உள்ள மாவட்டமாகஅனுராதபுர மாவட்டம் விளங்குகிறது. இதற்கு காரணம் இங்குள்ள மக்களுக்குசுத்தமான அல்லது சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் கிடைக்கப்பெறாமையே. இலங்கைவாழ் மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான சுத்தமான குடி நீர் இது வரைகாலமும் அனுராதபுர மாவட்டத்தில் அதிகளவான பிரதேசங்களில் உள்ளமக்களுக்கு சரியான முறையில் கிடைக்கப்பெறவில்லை என்பது யாரும் மருக்கமுடியாத உண்மை. இவ்விடயம் தொடர்பில் காலம் காலமாக அனுராதபுரத்தைஆண்டு வந்த அரசியல் பிரமுகர்கள் குறித்து சிந்திக்கையில் மிகவும்வேதனையாக உள்ளது.
வெறும் 3 வருடங்களையே கொண்ட எனது அரசியல் வாழ்க்கையில் இதுவரைக்கும் சுமார் 700 இற்கும் அதிகமான சாதரண மற்றும் அதிதொழினுட்பத்துடன் கூடிய குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை அனுராதபுரத்தின்பல பாகங்களிலுமுள்ள மிகவும் பிந்தங்கிய கிராமங்களுக்கு இன, மத, கட்சிபேதமின்றி வழங்கியிருக்கின்றேன் என்பதனை இவ்விடத்தில் மகிழ்ச்சியாகதெரிவித்துக்கொழ்கிறேன்.
எனது முயற்சியில் இவ்வருடத்திற்குள் இது போன்று இன்னும் பல குடி நீர்சுத்திகரிப்பு இயந்திரங்கள் அனுராதபுர மாவட்டத்தில் மிகவும் பின் தங்கியகிராமங்கள் பலவற்றிற்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள்நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதனையும் இவ்விடத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன். என தெரிவித்தார்.