நன்றிக்கு வித்தாகும் பொங்கல் பண்டிகையில் நாடும் மலையகமும் நலம்பெற வாழ்த்துகிறேன்!


-அமைச்சர் பி. திகாம்பரம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி-
ருளின் துயர் கலைந்து இன்னொளி வீசுகின்ற சூரிய பகவானுக்கும், உலகுக்கே உணவூட்டும் உழவுத் தொழிலுக்கும் அதற்குக் காரணமான மாடுகளுக்கும் நன்றி கூறுகின்ற உன்னத கலாசாரம் தமிழ் இனத்துக்கு இருந்து வருகின்றது. அதைக் கொண்டாடும் முகமாக தைமாதத்து முதல் நாளன்று சூரிய பகவானுக்கும், அடுத்த நாள் மாடுகளுக்கும் பொங்கல் வைத்து அதை பண்டிகையாக தொன்று தொட்டு கொண்டாடி மகிழ்கின்றோம். அத்தகைய சிறப்பு மிக்க நன்னாளில் எமது நாட்டு மக்களும் மலையக மக்களும் சகல வளங்களும் பெற்று சுபிட்சம் காண வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்காட்ட்மைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் விடுத்துள்ள திபோங்கள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தமது செய்தியில்,
பண்டிகைகள் வருவது வழமையாக இடம்பெற்று வரும் விடயங்களாகும். எனினும், சில பண்டிகைகள் மிகவும் எதிர்பார்ப்புடன் அமைந்து விடுகின்றன. எமது நாட்டின் அரசியல் சூழ்நிலை மோசமாக இருந்த நேரத்தில் கடந்த ஆண்டு இறுதியில் தீபாவளிப் பண்டிகையை வரவேற்றோம். ஜனநாயக அரசியல் காப்பாற்றப்பட்ட பின்னர் முதலாவதாக புத்தாண்டை வரவேற்று தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை வரவேற்கின்றோம்.
இந்த இரண்டு பண்டிகை காலத்திலும் மலையக மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. தமக்கு உரிய சம்பள உயர்வு கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக கிடைக்கும் என்ற எத்ர்பார்ப்போடு காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. இருந்தும் பொங்கல் பண்டிகைக்கு பின்னர் நல்ல முடிவு எட்டப்படும் என்ற நம்பிக்கையும் காணப்படுகின்றது.

கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் அடுத்தடுத்து தோல்வி கண்டாலும் அதை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அதற்குப் பொறுப்பானவர்களின் கடமையாகும். கூட்டு ஒப்பந்தம் என்ற போர்வையில் தனித்தனியே போராட்டம் செய்யாமல் அனைவரும் ஒன்று பட்டு போராட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவடைந்து வருகின்றது. சமூக நலன் கருதி ஒன்றுபடும் போதுதான் நியாயமான தீர்வைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

எனவே, புதிய ஆண்டிலாவது அரசியல், தொழிற்சங்க பலத்தைக் காட்டுவது மட்டும் நோக்கமாக இருந்து விடாமல் உண்மையிலேயே உழைக்கின்ற மக்கள் மீது அக்கறை கொண்டு சம்பளப் பிரச்சினைக்கு மாத்திரம் அல்லாமல் சகல விடயங்களிலும் ஒன்று பட்டு எமது சமூகத்தின் ஒற்றுமையையும், பலத்தையும் எடுத்துக் காட்ட திடசங்கற்பம் பூணுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -