இலங்கை சிறைச்சாலை ஒன்றில் நடந்த கொடுமை வீடியோ அம்பலம்! காணொளி

லங்கை சிறைச்சாலை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகள் மீது இலங்கை பொலிஸார் மனிதாபிமானமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான சி.சி.ரி.வி காணொளிகள் அம்பலமாகியுள்ளன.

கொழும்பு மருதானை – சி.எஸ்.ஆர். மண்டபத்தில் இன்று காலை ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது சிறைச்சாலை கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் செயலாளர் சுதேஷ் நந்திமால் இந்த காணொளிகளை வெளியிட்டிருக்கின்றார்.

அம்பாந்தோட்டை – அங்குனுகொலபெலஸ்ஸ என்ற பகுதியிலுள்ள சிறைச்சாலைக்குள் இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாகவும் கடந்தவருடம் நவம்பர் மாதம் 22ஆம் திகதி மேற்படி இந்த சம்பவம் பதிவாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.ஐபிசி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -