யாழ் கிளிநொச்சி முஸ்லிம் பேரவை உறுப்பினர்களுக்கும் கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்னே அவர்களுக்குமிடையில் விசேட சந்திப்பு

என்.எம்.அப்துல்லாஹ்-
யாழ் கிளிநொச்சி முஸ்லிம் பேரவை உறுப்பினர்களுக்கும் கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்னே அவர்களுக்குமிடையில் விசேட சந்திப்பு அண்மையில் யாழ்ப்பாணம் ஜெட்வின்ங் விடுதியில் இடம்பெற்றது. இச் சந்திப்பில் யாழ் கிளிநொச்சி முஸ்லிம் பேரவையின் பொதுச் செயலாளர் ஏ.சி.எம். மஹானாஸ், பொருளாளர் ஏ.ஜி;நௌபர், நிர்வாக செயலாளர் என்.எம். அப்துல்லாஹ், இணைப்பாளர் எச்.எம். சரூக் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேற்படி சந்திப்பில் பேரவையின் உறுப்பினர்கள் தூதுவருக்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்களின் தற்போதைய நிலைமைகள், தேவைகள், எதிர்பார்ப்புக்கள், தேவையான அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் விளக்கினார்கள்.
மேலும் 1990 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலப்பகுதியில் வடக்கு முஸ்லீம்களின் வாழ்வியல் அமைப்புக்களும், வெளியேற்றத்தின் பின்னர் அவர்களுடைய நிலை தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. மேலும் தொழில் சார் ரீதியிலான முன்னேற்றத்திற்கு யாழ்மாவட்டத்தில் உள்ள வாய்ப்புக்கள் தொடர்பில் தூதுவர் வினவியதற்கு அதற்கான வாய்ப்புக்களின் சாதக, பாதக தன்மைகள் குறித்தும் விளக்கப்பட்டது.

வடக்கு முஸ்லிம்களின் தற்போதைய நிலையையும், குறிப்பாக யாழ் கிளிநொச்சி முஸ்லிம்களின் வாழ்வியல் நிலைகளையும் தூதுவர் அவர்கள் முழுமையாக அறிந்து கொள்வதற்கு யாழ் கிளிநொச்சி முஸ்லிம் பேரவையுடனான இச் சந்திப்பு பயனுள்ளதாக அமைந்ததாக தூதுவர் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -