உழைக்கும் தொழிலாளர்களின் வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் பெற்று வாழ்ந்திட இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் சிரேஸ்ட தொழிற்ச்சங்கவாதியுமான சிங்.பொன்னையா தனது தை திருநாள் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தை பொங்கல் திருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
தமிழ் மாதங்களில்; தை மாதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு காரணம் உழவர்களினது உழைப்பிற்கும்,தம் உழைப்புக்கு உதவி நல்கிய சூரிய பகவானுக்கும், இயற்கைக்கும், உழவுத் தொழிலில் தம்மோடு உழைத்த விலங்குகளுக்கும் வருடம் முழுவதும் உழைத்துக் களைத்த மக்கள் தை முதல் நாளன்று நன்றி தெரிவிக்கும் முகமாக கொண்டாடப்படுன்றது. நன்றி தெரிவிப்பதற்காக, பொங்கல் பொங்கி, கூட்டு உழைப்பில் இணைந்த எல்லோரோடும் பகிர்ந்துண்பதாக இப்பண்டிகை கொண்டாடப்படும். வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம் தை பிறக்க வழி பிறந்து, அனைவரினதும்; வாழ்வில் ஒளி பிறந்து. துன்ப, துயரங்கள் விலகி இன்பங்கள்; பெருகி வாழ்வில் இனிதே நிலைக்கட்டும் என்றார்.