உலகளாவிய ரீதியில் வாட்ஸ் அப் நிறுவனம் விதித்துள்ள புதிய கட்டுப்பாடு


ஐ. ஏ. காதிர் கான்-
ரு செய்தியை ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே மீள அனுப்ப (forward) முடியுமான வகையில், வாட்ஸ் அப் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு மாற்றத்தைக் கொண்டு வந்ததுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமான இந்தக் கட்டுப்பாடு, தற்போது உலக அளவில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சமூக வலைத்தளங்களில் முக்கிய இடம் வகிக்கும் வாட்ஸ் அப்பில் பல்வேறுவிதமான நம்பகத் தன்மையில்லாத செய்திகள், படங்கள் சமீபகாலமாக பரப்பப்படுகின்றன.
குறிப்பாக, பலாத்காரம், குழந்தைகள் கடத்தல், பசுக்களைக் கடத்துதல் தொடர்பான வீடியோக்கள் போன்றவை போலியாகச் சித்தரிக்கப்பட்டும், பழைய வீடியோக்களையும் சமீபத்தில் நடந்ததுபோல் சித்தரித்தும் பரப்பிவிடப்படுகின்றன.
மக்கள் இதை நம்பி, பல்வேறு இடங்களில் வன்முறைகளிலும், தாக்குதல்களிலும் ஈடுபட்டனர். இந்திய அரசின் உத்தரவை அடுத்து, வாட்ஸ் அப் நிறுவனம் இதைத் தடுக்கும் வகையில் ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே மீள அனுப்ப (forward) முடியுமான வகையில் கட்டுப்பாடு விதித்தது.
மேலும், வதந்திகளையும், போலிச் செய்திகளையும் தடுக்க புதிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், ஒரு மெசேஜ் எங்கிருந்து வருகிறது, யார் அனுப்புகிறார்கள், பரப்புகிறார்கள் என்பதைக் கண்காணிக்கும் முறையை வகுத்து வருவதாகவும், வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம் அளித்தது.
இந்நிலையில், இந்தக் கட்டுப்பாடு உலக அளவில் அனைத்து நாட்டிலும் உள்ள வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்களிடம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
உலக அளவில் 150 கோடி பயனாளிகள் வாட்ஸ் அப் ஐப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -