மானுட நல்லிணக்கத்திற்கு வழிகாட்டும் வருடமாக தைத் திருநாள் மலரட்டும்


- தை தின வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ-
ஐ. ஏ. காதிர் கான்-லர்ந்துள்ள 2019 தைப் பொங்கல் புத்தாண்டு, இலங்கை வாழ் தமிழ் மக்களின் வாழ்வில் சமாதானம் செளபாக்கியம், சுபீட்சம் நிறைந்த ஆண்டாகவும், மானுட நல்லிணக்கத்திற்கு வழிகாட்டும் வருடமாகவும் அமைய, தான் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்பதாக, தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, தனது தைத்திருநாள் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில், அமைச்சர் மேலும்
தெரிவித்துள்ளதாவது,

இத்திருநாள், மனிதருக்கு உணவளிக்கின்ற உழவுத் திருநாள். இவ் உலவர் தினம், உழவர்களுக்கு முக்கியத்துவம் பெறுகின்றது. உலகத்திற்கே பொதுவான ஒரு தினம்.
எனவே, இத்திருநாளிலிருந்து குரோதங்கள், மனக்கசப்புக்கள், கடந்த கால சம்பவங்கள் அனைத்தையும் களைந்தெறிந்து, இன்றைய தைத்திருநாளைக் கொண்டாடுவதே, நாம் புரியும் மிகப் பெரும் நன்மையான காரியமாகும்.
நாடு சுபீட்சமடைய வேண்டும், தேசிய சகவாழ்வு உருவாக வேண்டும் என்ற நல்லெண்ணம் எம்மிடையே வரவேண்டும்.
நான் இன்றைய திருநாளைக் கொண்டாடுவது போன்று, அவரும் கொண்டாட வேண்டும். நான் மகிழ்ச்சியாக இருப்பதைப் போன்று, அவரும் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்ற மனப்பாங்கும், நமது ஒவ்வொருவரது உள்ளத்திலும் வரவேண்டும்.
நான் வேறு, அவர் வேறு என்ற மன நிலையை மாற்றி, நாம் என்ற உணர்வுடன் சகல சமூகங்களுடனும் அன்னியோன்யமாகவும், ஐக்கியமாகவும், இணக்கப்பாட்டுடனும் வாழும் சூழ்நிலையையும் நாம் நம் மத்தியில் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
சூரியன் உதயமாகும் இன்றைய நன் நாளிலிருந்து, எமது அனைத்து கருமங்களும், அனைத்து செயற்பாடுகளும் அனைவரது வாழ்விலும் இனிதே சிறக்க வேண்டும், புதுப்பொழிவு பெற வேண்டும். இப்புத்தாண்டிலிருந்து புது உத்வேகத்துடனும், புது நம்பிக்கையுடனும் எமது பணிகளை ஆரம்பிப்போம். குறிப்பாக, மிகச்சிறந்த ஆண்டாக, இவ்வாண்டு சுடர்விட்டுப் பிரகாசிக்க வேண்டும். சகல மக்களும் இப்பாரினில் வேற்றுமைகளைக் களைந்து, ஒற்றுமையாக வாழ, இப்புத்தாண்டில் மீண்டும் வாழ்த்திப் பிரார்த்திக்கின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -