தைபொங்கல் பண்டிகையை முன்னிட்டு கல்முனை வர்த்தக சங்கம் விடுத்த வேண்டு கோளை கல்முனை வர்த்தகர்கள் ஏற்றுக் கொண்டு இன்று வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
வெள்ளிக் கிழமைகளில் சாப்பு-சட்டப்படி கடை அடைத்து விடுமுறை கொள்வதும் குறிப்பிடத் தக்கது.
இன்று தமிழ் உறவுகளுக்காக தைப்பொங்கல் தினத்திற்காக முன்கூட்டியே அன்றாட விசேட தேவைகளை நிறைவு செய்யும் முகமாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கல்முனை பிரதேச வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை சில தமிழ் பிரதேச வர்த்தகர்கள் கடைகளை மூடி ஹர்த்தால் அனுஸ்டித்தனர். கிழக்கு மாகாண ஆளுணர் நியமனம் முஸ்லிம் ஒருவருக்கு வழங்கியமையை எதிர்த்தே மேற்படி கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.