உலகின் தொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது -அமைச்சர் மனோ விடம் சீன தூதுவர் செங் யுவான்

லங்கை மக்களுடனான எமது உறவு சிங்களம் பேசும் மக்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. தமிழ் மொழி பேசும் மக்களையும் நாம் எமது உறவு வலயத்தில் வைக்கவே விரும்புகிறோம். இந்நிலையில் இலங்கையில் இடம்பெறும் சீன அபிவிருத்தி மற்றும் தொழிற்திட்டங்களின் பெயர் பலகைகளில் தமிழ் மொழியை திட்டமிட்டு அவமதிக்கும் நோக்கம் கிஞ்சித்தும் எமக்கு கிடையாது. 

இனிமேல் சீன நிறுவனங்களின் பெயர்பலகைகள் இலங்கையில் அமைக்கப்படும் போது உங்கள் அமைச்சுடன் கலந்து பேசி அவற்றை அமைக்க எங்கள் வர்த்தக பிரிவு அதிகாரியை நான் நியமிக்கிறேன் என சீன தூதுவரின் அழைப்பை அவரது இல்லத்துக்கு இன்று விஜயம் செய்த தமிழ் முற்போக்கு கூட்டணி-ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள்,சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசனிடம், இலங்கையிக்கான சீன தூதுவர் செங் யுவான் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பில் அமைச்சர் மனோ கணேசனுடன் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சந்திரசேகரம்,பணிப்பாளர் மதிவதனன் ஆகியோரும் கலந்துக்கொண்டனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -