கனவான் அரசியலுக்கு முன்மாதிரியாக மாறிய இளம் முஸ்லிம் அரசியல்வாதி


கஹட்டோவிட்ட ரிஹ்மி-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் குருநாகல் பிரதேச சபை உறுப்பினர் திக்ருல்லாஹ் ஜிப்ரி அவர்கள் இன்றைய தினம் (13) தனது பதவியினை சுயவிருப்பின் பேரில் இராஜினாமா செய்தார். 2018 ஆம் ஆண்டு பெப்ரவரியில் நடைபெற்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தலில், குருநாகல் பிரதேச சபையில் மரச்சின்னத்தில் போட்டியிட்ட ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வரலாற்றில் முதற் தடவையாக ஆசனமொன்றை வென்று தனது பிரதிநிதித்துவத்தை சபையில் நிலைநாட்டியது.
பட்டியல் முறையில் வென்றெடுக்கப்பட்ட அந்த ஆசனத்திற்கு, கட்சியின் இளம் போராளியான திக்ருல்லாஹ் ஜிப்ரி தெரிவு செய்யப்பட்டார். தன்னுடைய இளமையின் வேகத்தின் மூலம் இன்று வரையான குறுகிய காலப்பகுதியில் தன்னால் இயன்ற சமூகப்பணிகளை கட்சித் தலைமையினதும், மாவட்டத் தலைமையினதும், மாவட்ட மத்திய குழுவினதும் ஒத்துழைப்புடன் செய்து வந்தார்.
தன்னுடன் போட்டியிட்ட சக வேட்பாளர்களுக்கும் வாய்ப்புக்களை வழங்கும் நன் நோக்குடனே தான் இராஜினாமா செய்வதாகவும், யாரும் தன்னை நிர்ப்பந்திக்கவில்லை என்றும் திக்ருல்லாஹ் தெரிவித்தார்.

இவரது இராஜினாமா பற்றி கருத்துத் தெரிவித்த முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், கட்சியின் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்சா, இளம் அரசியல்வாதி திக்ருல்லாஹ்வின் இராஜினாமாவானது, எங்களது ஏனைய அரசியல்வாதிகளுக்கு சிறந்தவொரு முன்மாதிரியாகும் என்று தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -