ராகுல் காந்தி பிரதமராக வருவது பகல் கனவு என்கிறார் ஸ்மிருதி இரானி

த்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் நலத்திட்ட விழாவில் பேசிய பாஜக மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி, ராகுல் காந்தி பிரதமராக வருவார் என காங்கிரஸ் கட்சி பகல் கனவு காணுகிறது என தெரிவித்துள்ளார்.


உத்தரப்பிரதேச மாநிலத்தின் அமேதி தொகுதியில் பாஜக மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி இன்று சுற்றுப்பயணம் செய்தார்.

அமேதி தொகுதியில் உள்ள கவுரிகஞ்ச் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிடி ஸ்கேன் இயந்திரத்தை அப்பகுதி மக்களுக்கு அர்ப்பணித்து வைத்தார். அதன்பின்னர், அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:





அமேதி பாராளுமன்ற தொகுதியில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளிலும் கடந்த 2017ல் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. ராகுல் காந்தி பிரதமராக வருவார் என காங்கிரஸ் கட்சி பகல் கனவு காணுகிறது.

காங்கிரஸ் ஆட்சியை விட, பாஜக ஆட்சியில்தான் அமேதியின் வளர்ச்சி அதிகரித்து வந்துள்ளது. அமேதி முன்னேற்றத்துக்கு மோடி அரசுதான் காரணம்.

அயோத்தியா விவகாரத்தில் கோர்ட் நடவடிக்கைகளை வேகப்படுத்தாதது ஏன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -