சிங்கப்பூர், இந்திய தொழில் நிபுணர்கள் தமிழில் விளக்கமளிக்க மட்டக்களப்பு வருகின்றார்கள்.

ர்த்தக உலகின் ஜாம்பவான் என புகழப்படும் ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடான சிங்கப்பூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் அஸீஸா ஜலாலுத்தீன் சீனாவில் ஆரம்பக் கல்வியை கற்றதோடு, லன்டன் பல்கலைக் கழகத்தில் நிதியியலையும், அமெரிக்க வியாபார கல்லூரியில் தொழில்சார் படிப்பையும் முடித்தவராவார்.

தமிழ், மலாய், சைனீஸ், ஆங்கிலம் என நான்கு மொழிகளிலும் சரளமாகப் பேசக்கூடிய இவர் அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா, சீனா, மலேசியா, தாய்வான் போன்ற ஆசிய நாடுகள் உட்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று தொழில்வழிகாட்டல் நிகழ்வுகளை நடாத்திவருகின்றார்.
அவருக்கு பக்கபலமாக, இந்தியாவின் பிரபலமான 800 க்கு மேற்பட்ட பயிற்சியாளர்களை தன்னகத்தே கொண்ட IFPT தலைமை நிறுவுனரான அய்யப்பா தாஸ் அவர்களும் இவரது முயற்சிகளுடன் இணைந்து, வர்த்தக சமூகத்துக்கு தேவையான வழிகாட்டல்களை மட்டுமன்றி, அவர்களை சர்வதேச அளவில் இணைத்துவிடுகின்ற நடவடிக்கைகளையும் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு இயங்கும் Shine GoGlobal நிறுவனத்தினூடாக மேற்கொண்டு வருகின்றார்.
இலங்கையின் தற்போதைய சூழ்நிலையில் மக்கள் தங்களது தொழில்முயற்சிகளை விரிவுபடுத்தவும், காலத்திற்கேற்ப மாற்றியமைக்கவும், சர்வதேச வர்த்தக சமூகத்துடன் இணைந்த வகையில் முன்னெடுக்கவும் ஆர்வமாகவுள்ள இன்றைய சூழலைக் கருத்திற்கொண்டு கிழக்கு மாகாணத்தை தளமாகக் கொண்டு இயங்கும் சமூக தொழில்முனைவு நிறுவனமாகிய பிஸிலங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில், GoGlobal Business Workshop என்ற பெயரில் தொழில் முயற்சியாளர்களுக்கு வழிகாட்டும் செயலமர்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 03.02.2019 (ஞாயிற்றுக் கிழமை), மட்டக்களப்பு ஹொட்டல் ஈஸ்ட்லகூன் யில் இடம்பெறவுள்ள இச் செயலமர்வில் கலந்துகொண்டு,

· நிறூபிக்கப்பட்ட உலகளாவிய வெற்றிமிகு வியாபார மாதிரிகள்.

· உங்கள் வியாபார வளர்ச்சிக்கான அடைப்புகளை இனம்காணுதல்.

· வாழ்கையிலுள்ள தடைக்கற்களை நீக்க 3 படிகள்.

· வியாபார தொடர்புகளை பெற்றுக்கொள்ளும் வழிகள்.

· உங்கள் வியாபாரத்தை முதலீடு பெறும் விதத்தில் மாற்றி அமைத்தல்

· உங்கள் வியாபாரத்துக்கு நிதி ஈட்டுவதற்கான இரகசியங்கள்.

· உங்கள் வியாபாரத்தை விஸ்தரிக்க அல்லது உலக அளவில் எடுத்துச்செல்ல தேவையான திறன்கள்.

· 21 ஆம் நூற்றாண்டின் சந்தைப்படுத்தல் முறைமைகள்.

· போட்டிகளை முறியடிப்பதற்கான நிறூபிக்கப்பட்ட உலகளாவிய வியாபார யுக்திகள்.

போன்ற தலைப்புக்களில் தமிழில் கருத்துக்களை வழங்குவதற்காக டாக்டர் அஸீஸா ஜலாலுத்தீன் மற்றும் அய்யப்பா தாஸ் ஆகியோர் இலங்கைக்கு வருகைதர இருக்கின்றார்கள். எனவே, தமிழ்பேசும் மக்களுக்கு தங்களது வியாபாரத்திலுள்ள சிக்கல்களை அடையாளம் கண்டு அடுத்தகட்டத்துக்கு நகர்த்தவும், சர்வதேச வியாபாரம் பற்றிய தெளிவை பெறவும் நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ள இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் ஆசனங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், தங்களது பெயர்களை உறுதிப்படுத்திக் கொள்ள 0778191491 என்ற இலக்கத்துக்கு உடனடியாக அழைக்குமாறும், இந்த தகவலை அதிகம் பகிர்ந்துகொண்டு அடுத்தவர் வாழ்விலும் ஒளியேற்ற உதவிசெய்யுமாறும் அன்புடன் பிஸிலங்கா சமூக தொழில்முனைவு நிறுவனம் வேண்டிக் கொள்கின்றது. 






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -