ஏறாவூர் பஷீர் சேகுதாவூத் வித்தியாலயத்துக்கு தீ வைப்பு..!

எம்.எஸ்.எ.நஸீர்-

ட்டக்களப்பு மத்தி வலய ஏறாவூர் கோட்டத்தில் அமைந்துள்ள மீராகேணி பஷீர் சேகுதாவூத் வித்தியாலய அதிபர் காரியாலயத்துக்கு இன்று (15/01) காலை தீவைக்கப்பட்டிருப்பதை, பாடசாலையில் வகுப்பு நடாத்த சென்ற ஆசிரியர் ஒருவர் காலை 09.00 மணியளவில் அவதானித்து அதிபரிடம் தொலைபேசியூடாக தெரிவித்துள்ளார்.

 உடனடியாக பாடசாலைக்கு சமூகமளித்த அதிபர் ஜனாப் AL பாறூக், காரியாலயத்தை திறந்து பார்த்த போது அலுவலக கணணி கதிரை, பிரின்டர், பாடசாலை தகவல்கள் அடங்கிய காகிதாதிகள், இடாப்புகள், கோப்புகள் என்பனவும் எரிந்து சாம்பலாகிய நிலையிலிருப்பதை அவதானித்து வலயக் கல்விப் பணிப்பாளருக்கும், கோட்டக்கல்வி அதிகாரிக்கும் விடயத்தை தெரிவித்துவிட்டு ஏறாவூர் பொலிஸிலும் முறைப்பாடு செய்துள்ளார். 

சற்றுமுன் தடயவியல் பொலிசாரும் சம்பவ இடத்துக்கு சமூகமளித்து சென்றிருக்கிறார்கள். பாடசாலை அபிவிருத்தி விடயத்தில் அருகிலுள்ள விளையாட்டு மைதான காணி சம்பந்தமான பிணக்குகள் அண்மைக்காலமாக வலுவுற்றிருந்ததையும் முகப்புத்தகமூடாக அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -