விளையாட்டு கழகங்களை சேர்ந்த இளைஞர்கள் விளையாட்டு துறையில் ஆர்வம் காட்டி போட்டி மனப்பாங்கோடு செயல்பட்டு பல சாதனைகளை புரிவதுடன், நமது சமூக நலனுக்காக பல மாற்றங்களை ஏற்படுத்த ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என அட்டாளைச்சேனை ஏ.பீ.எல் விளையாட்டு கழகத்தின் தலைவர் எஸ்.றமீஸ் ஜே.பி தலைமையில் நடைபெற்ற விளையாட்டு கழகத்திற்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில்...........
இறைவனால் எமக்கு வழங்கப்பட்ட இழமைப்பருவம் வாழ்க்கையில் மீண்டும் ஒரு தரம் நமக்கு கிடைக்காது இழமைக்காலத்தில் தாங்கள் பல சாதனைகளைப் புரிவதுடன் நாங்கள் வாழும் சமூகத்திற்காக எப்போதும் நல்லவைகளை நினைத்து நல்லவைகளை செயல்படுத்துவதற்கு பழகி கொள்ளுங்கள் அதனால் நாம் எப்போதும் நிம்மதியாக வாழ சந்தர்ப்பம் கிடைக்கும் மாறாக நாம் வாழும் சமூகத்தில் மற்றவர்களை மதிக்காமல் தீயவைகளை நினைத்து செயல்பட்டால் நிம்மதியாக இந்த உலகத்தில் வாழ முடியாது என்பதனை நமது இளைஞர் சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நாம் எவ்வாறு இந்த உலகத்தில் வாழ்ந்தோம் என்பதற்கு நம்மோடு வாழ்ந்த மக்களே நாம் மரணித்த பின் சாட்சியாக இருப்பார்கள் என்பதனையும் இளைஞர்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். இளைஞர்கள் எல்லாத் துறைகளிலும் கவனம் செலுத்துவது போன்று நமது மார்க்க நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டும் நம் பிரதேசங்களில் அமைந்துள்ள பள்ளிவாசல்களின் நடவடிக்கைகளுக்கும் ஏனைய சமூக நலன் நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
நாங்கள் பாடசாலை செல்லும் காலங்களில் எங்களின் கல்வி நடவடிக்கைகளை பார்வையிடுவதற்கு தினமும் குடும்பத்தைச் சேர்ந்த பல உறவினர்கள் வந்து எங்கள் வீடுகளுக்கு வந்து எமது கல்விச் செயற்பாடுகள் குறித்து பல கேள்விகளைக் கேட்பதுடன் பாடசாலையில் நடைபெற்ற கல்வி விடயங்கள் தொடர்பான புத்தகங்கள், கொப்பிகளை தினமும் பார்வையிட்டுச் செல்வார்கள். இதனால் அன்று அதிபர்,ஆசிரியர்களுக்கு பணிந்து கல்விச் செயற்பாடுகளில் கூடிய கவனம் செலுத்துவதுடன், குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து எமது கல்வி செயற்பாடுகளை பரிசோதிப்பர் என்ற பயத்துடனும் கல்வி கற்றோம்.
அந்த காலத்தில் இருந்த குடும்பங்களுக்கிடையில் உள்ள உறவுகள் தற்போது இல்லாத நிலை உருவாகி மிக நெருக்கமான குடும்;பங்களின் வீடுகளுக்கு கூட செல்ல முடியாத அளவில் இன்று மனிதர்கள் வேலைப்பாடுகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இப்போது மரணங்கள் தீடீர், தீடீர் என நிகழ்ந்து கொண்டுயிருக்கின்றன இவைகளை நினைத்து நாமும் அஞ்சி நல்ல விடயங்களுக்கு முக்கியதுவம் கொடுக்க வேண்டும். அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு வீரர்கள் நீண்ட காலமாக நமது பிரதேசத்தில் விளையாட்டு துறையில் பிரதேச, மாவட்ட, மாகாண, தேசிய ரீதியில் பல சாதனைகளை பெற்று வருகின்றனர். இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய விளையாட்டுத் துறை அதிகாரிகளை பாராட்டுகிறேன்.
விளையாட்டுத்துறை ஊடாக கிழக்கு மாகாணத்தில் இன உறவை வளர்ப்பதற்கு நல்ல சந்தர்ப்பம் நம் எல்லோருக்கும் கிடைக்கின்றது. எனவே முஸ்லிம் பிரதேசங்களில் நடைபெறும் இளைஞர்களுக்கான நிகழ்வுகளில் தமிழ் இளைஞர்களும், சிங்கள இளைஞர்களும் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளும் சிங்கள, தமிழ் பிரதேசங்களில் நடைபெறும் இளைஞர்களின் நிகழ்வுகளில் முஸ்லிம் இளைஞர்களும் கலந்து கொள்ளும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டும் இந்நிகழ்வுகளால் நமது சமூகங்களுக்கிடையில் இன ஐக்கியத்தையும், புரிந்துணர்வுகளையு;ம வளர்க்க வாய்ப்புகள் ஏற்படும்.
விளையாட்டுக் கழகங்கள், இளைஞர் அமைப்புகள் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு ஒரு போதும் கட்சி பேதமின்றி நாம் உதவி, ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம். எனவே தொடர்ந்தும் ஒற்றுமையுடன் செயல்பட்டு பல சாதனைகளை புரிய இறைவனை பிரார்த்திக்கின்றேன் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட விளையாட்டு பயிற்சி பொறுப்பாளர் றசீன், அம்பாறை மாவட்ட உதவி திட்டடமிடல் பணிப்பாளர் ஐ.எல்.பஜ்றுடீன், அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் அஜ்வத் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.