வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவை இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் இன்று (26) சனிக்கிழமை சந்தித்து கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் குழுவை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
காயத்திரிபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள 159 ஆவது மாதிரி கிராமத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வுக்காக திருக்கோயிலுக்கு வருகை தந்துள்ள அமைச்சர் சஜித் பிரேமதாசவை அங்கு சென்று சந்தித்த மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மேற்படி வேண்டுகோளை விடுத்தார்.
அதற்கமைவாக தொல்பொருளியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கதைத்து குறித்த மாணவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் ஹரீஸிடம் உறுதியளித்தார்.
தொல்பொருளியல் திணைக்களமனது வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.