கிழக்கு மாகாணம் தொடர்ந்தும் அபிவிருத்திகளில் முன்னேற வேண்டும்.


ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிழக்கு மாகாணத்தை தொடர்ந்தும் அபிவிருத்திக்கு இட்டுச் செல்ல வேண்டும் .புதிதாக கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்ட கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன் என முன்னால் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம இன்று (04) விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது
கிழக்கு மாகாண ஆளுனராக இன்றைய தினம் ஜனாதிபதி முன்னிலையில் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பதவிப் பிரமாணம் செய்திருப்பதை வரவேற்று மீண்டும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.
கிழக்கு மக்கள் தொடர்ந்தும் பரஸ்பரம், சகோதரத்துவம், ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
கிழக்கில் ஆளுனராக கடமையாற்றிய போது தனக்கு வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்களுக்கும் மாகாண அரச சேவையாளர்கள், திணைக்கள தலைவர்கள், கிழக்கு மக்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன்.

கிழக்கு மாகாண மூவின மக்கள் தொடர்ந்தும் பாதுகாப்புடனும் சுதந்திரமாகவும் வாழ வேண்டும் எனவும் புதிய ஆளுனர் இதற்காக ஒத்துழைப்புக்களை வழங்குவார் என்றும் எதிர்பார்த்து மீண்டும் மீண்டும் புதிய மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -