நற்பிட்டிமுனையில் மாணவியுடன் சேட்டை செய்த நபர்களை பொலிஸார் கைது !


காரைதீவு சகா-
ற்பிட்டிமுனை பிரதானவீதியில் தமிழ்மாணவியுடன் சேட்டை செய்த முஸ்லிம் நபர்களை கல்முனைப் பொலிஸார் நேற்று(26) கைது செய்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் (25) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நற்பிட்டிமுனை பாண்டிருப்பு வீதியில் வைத்து 17 வயது தமிழ்ச்சிறுமி
ஒருவருடன் இரு முஸ்லிம் இளைஞர்கள் சேட்டை செய்ததனால் நற்பிட்டிமுனை தமிழ் முஸ்லிம் எல்லை பகுதியில்பதற்றம் ஏற்பட்டிருந்தது.

குறித்த சிறுமியினால் கல்முனை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு
செய்யப்பட்டிருந்தது. இவ்விடயம் தொடர்பாக தெரிவிக்கப்படுவதானது:

குறித்த சிறுமி தனது உறவினர்கள் வீட்டில் இருந்துமாலை வீடு நோக்கி
செல்லும் வழியில் நற்பிட்டிமுனை முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த நபர்களால்
வீதியில்வைத்து அங்க சேட்டை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தின்போது வீதியில் சென்ற இளைஞர்கள் குறித்த நபர்களை மடக்கி
பிடித்துள்ளனர். பொலிஸாருக்கு ஒப்படைப்பதாக கூறியதால் அவர்களின்
உறவினர்களிடம் ஒப்படைத்திருந்தனர் பின்னர் அவர்கள் தலைமறைவாகியிருந்தனர்.
குறித்த நபர்கள் அவர்களது பகுயில் ஒழிந்திருந்தால் பொலிஸாரால்
தேடப்பட்டும் கைது செய்ய முடிந்திரருக்கவில்லை அவர்களை கண்டுபிடித்து
கைது செய்யுமாறு சிறுமி சார்பாக பொது மக்களும், தமிழ் இளைஞர் சேனையும்,கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ராஜன், செல்வா ஆகியோரும் பொலிஸாரை கேட்டிருந்தனர். நற்பிட்டிமுனை பள்ளிவாசல் நிருவாகத்துடனும் பேசியிருந்தனர்.
தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழும் இப்பிரசேத்தில் இவ்வாறான
செயற்பாடுகள் இனங்களுக்கிடையில் மேலும் விரிசல்களை முரண்பாடுகளை ஏற்படுத்தும் ஆகவே இவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரியிருந்தனர்.

இச்சம்பவத்தால் பதற்றமான சூழ்நிலையும் நிலவியது பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையும் சென்றிருந்தனர்.நள்ளிரவு 1மணிவரை அங்கு இருசாராரும் கூடியிருந்தனர். ஒருவித பதட்டம் நிலவியது.

சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களை கைது செய்வதாக உறுதியளித்த பொலிஸார் நேற்று இரண்டு இளைஞர்களையும் கைது செய்தனர்.
நடுநிலையாக செயற்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ள கல்முனை தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.கே.எஸ்.கே ஜெயநிதி அவர்களுக்கு பொதுமக்கள் இளைஞர்கள் சார்பாக இளைஞர் சேனை தலைவர் டிலான்சன் நன்றியையும் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -