மட்டக்களப்பு காத்தான்குடி தளவைத்தியசாலையில் அவசியத் தேவையாக காணப்பட்ட ஆண்கள் சிகிச்சை விடுதி பாத்திமா பௌண்டேசனின் அணுசரணையில் அமைக்கப்பட்டு இன்று பொது நோயாளிகளின் பயண்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது.
காத்தான்குடி தளவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபிர் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக பங்கேற்று இவ் வைத்தியப்பிரிவினை திறந்து வைத்தார்.
இந் நிகழ்வில் பாத்திமா பௌன்டேசனின் பணிப்பாளர் சஹாப்தீன் இக்ராம் சமூக செயற்பாட்டாளர் பிரோஸ் நவாஸ் ,வைத்திய அதிகாரிகள் ,உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது கிழக்கு மாகாண ஆளுநருக்கு காத்தான்குடி தளவைத்தியசாலையினால் அவரின் சேவைகளைப்பாராட்டி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.