கொழும்பு - புறக்கோட்டை, டாம் வீதியில் அமைந்துள்ள "மஸ்ஜிதுல் ஹிதாயத்" பள்ளிவாசல், நவீன முறையில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு, அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
இப்புனர் நிர்மாண நற்பணிகளில், பள்ளிவாசல் நிர்வாக சபைத்தலைவர் தேசபந்து எம்.எம்.எம். மர்சூக் ஹாஜி (அ.இ.ச.நீ.), ஹாஜிகளான அரூஸ் முஹம்மது, ஏ.எஸ். முஹம்மது ஷபீக், எம்.ஓ.எம். மீரா சாஹிபு, எச்.டி. மஹுதூம் ஹுஸைன், சபூர் கனி, பந்தே நவாஸ் ஆகியோர், பெரும் பங்களிப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுமார் நூறு வருடங்கள் பழைமை வாய்ந்த இப்பள்ளிவாசல் கட்டிடத்தை, புறக்கோட்டையைச் சேர்ந்த பிரபல வர்த்தகர்களான மஹ்தூம் பிள்ளை மற்றும் சகோதரர்கள், அடிப்படை ஸ்தாபகர்களாக இருந்து அன்பளிப்புச் செய்திருந்தனர். சுமார் 2000 ஆம் ஆண்டளவில், மெளலவி ஹிஸ்புல்லாஹ் ஹழ்ரத்தின் விடா முயற்சியால், இப்பள்ளிவாசலின் மேல் மாடி அமைக்கப்பட்டது.
இத்திருப்பணிக்கு சகல விதத்திலும் உதவி புரிந்த நிர்வாக சபை உறுப்பினர்கள், வியாபாரிகள், நலன் விரும்பிகள் அனைவருக்கும், இப்பள்ளிவாசல் நம்பிக்கை சபையினர், தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.