இலங்கையின் 7வது தேசிய இளைஞர் திரைப்பட விழாவில் கல்முனை ஜேயாலின் ஆவணப்படமம் முதலிடத்தைப் பெற்றுச்சாதனை படைத்துள்ளது.
தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் இவ்வருடம் 7வது தேசிய இளைஞர் திரைப்பட விழா கொழும்பு திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தரங்கணி மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் தேசிய ரீதியில் பல இடங்களிலும் இருந்து குறும்படங்களும் ஆவணப்படங்களும் திரையிடப்பட்டு இறுதி நாளான ஞாயிறு (23.12.2018) அன்று விருதுகளும் வழங்கப்பட்டன. இதில் கல்முனைச்சேர்ந்த இயக்குனர் ஜோயல் அவர்களின் நுண்கடனினால் மக்கள் படும் அவலத்தை கூறுகின்ற ஆவணப்படம் The Silent Killer சிறந்த ஆவணப்படங்களுள் முதலிடத்தை பெற்றதுடன் சிறந்த script writing மற்றும் படத்தொகுப்பிற்குமாக விருதுகளை பெற்றுக்கொண்டது.
இவரின் butterflies ஆவணப்படம் கடந்த வருடம் இதே போட்டியில் 3ம் இடத்தை பெற்றதுடன் அதற்கு முந்தைய வருடம் இவரின் ‘இதுவும் கடந்து போகும்’ குறும்படம் Merit awardஐயும் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.