அனர்த்த பாதுகாப்பு விழிப்புணர்வூட்டும் விசேட வேலைத்திட்டம்

ஏ.எம் றிகாஸ்-
கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகள் தோறும் அனர்த்த பாதுகாப்பு திட்டத்தினை அமுல்படுத்தும் நோக்கத்துடன் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வூட்டும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையுடன் சிறுவர் பாதுகாப்பு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படுத்தப்படும் இத்திட்டத்தின் அங்குரார்ப்பன நிகழ்வு 30.01.2019 ஏறாவூர்- அலிகார் தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் முன்னெடுக்கப்படும் முதற்கட்ட நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
வலயக்கல்விப்பணிப்பாளர் டாக்டர் எஸ்எம்எம்எஸ் உமர் மௌலானா நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். ஏறாவூர் கோட்டக்கல்விப்பணிப்பாளர் ரீஎம். செய்யித் அஹமட் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரி ஏஎம்எம் கஸீர் மற்றும் சிறுவர்களை மையப்படுத்திய அனர்த்த குறைப்பு முகாமைத்துவ திட்ட அதிகாரி மன்சூர் அஹமட் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு விளக்கவுரை நிகழ்த்தினர்.
அனர்த்தம் ஏற்படும்போது பாடசாலை மற்றும் சூழலிலுள்ள சிறுவர்கள் தம்மையும் தம்மைச்சுற்றியுள்ளவர்களது உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்கும் முறைகள் குறித்து இத்திட்டத்தின்மூலம் அறிவூட்டல் செய்யப்படவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மட்டக்களப்பு, பட்டிருப்பு மற்றும் கல்குடா ஆகிய கல்வி வலயங்களிலும் இத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை வாழைச்சேனை மத்தி, வாகரை மற்றும் கிரான் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சிறுவர்களை மையப்படுத்தி இப்பரீட்சார்த்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -