ஹெரோயின் மற்றும் என்சி என்ற போதை பொருளுடன் ஜேர்மன் நாட்டு பெண்கள் இருவரை அட்டன் பொலிஸார் 21.01.2019 அன்று மாலை கைது செய்துள்ளனர்.
ஜேர்மன் நாட்டில் இருந்து நுவரெலியா பகுதிக்கு சுற்றுலா பயணிகளாக வந்த இரண்டு பெண்களும் வாடகைக்கு கார் ஒன்றினை பெற்று நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி புறபட்டு சென்ற வேளையில் அட்டன் மல்லியப்பு சந்தியில் வைத்து குறித்த கார் வண்டியினை பரிசோதனை செய்த போதே குறித்த இரண்டு பெண்மனிகளிடம் இருந்து இந்த ஒரு தொகை போதை பொருள் மீட்கபட்டதாக அட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யபட்ட இரண்டு பெண்கள் மீது அட்டன் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதோடு 22.01.2019 அன்று செவ்வாய்கிழமை குறித்த இரண்டு பெண்களும் அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக அட்டன் பொலிஸார் மேலும்தெரிவித்தனர்.