இலங்கை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கட்டாரில் இயங்கிவரும் தேசிய கால்பந்தாட்ட அணிக்கு, மாதம்பையைச் சேர்ந்த முஸ்அப் காமில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர், மாதம்பை அல் - மிஸ்பாஹ் பாடசாலையின் பழைய மாணவராவார்.
பாடசாலைக் காலங்களிலேயே கால்பந்தாட்டப் போட்டிகளில் தேசிய ரீதியில் தனது திறமைகளை வெளிக்காட்டி, தனது ஊருக்கும் அல் மிஸ்பாஹ்வி்ற்கும் பெருமை சேர்த்தவர் என்பதுடன், பல விருதுகளைப் பெற்று சாதனைகளை நிலைநாட்டியுள்ளவுமாவார்.
இவரின் அபாரத்திறமையினால், மலேசியாவுக்கான கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிகளுக்கும் இவர் தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இதற்கு முன்னர் மாதம்பையைச் சேர்ந்த பஸால் அஸ்கர், இதே அணிக்காக விளையாடியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.