அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை பொதுமக்களுக்கு சட்ட ரீதியாக உள்ளது


அப்துல் அஸீஸ், பிராந்திய இணைப்பாளர், மனித உரிமைகள் ஆணைக்குழு

ரு ஜனநாயக நாட்டில் அரசின் உரித்துரிமை மக்களுக்கே சொந்தமாகும். அரசும், அரச நிறுவனங்களும் பராமரிக்கப்படுவது பொதுமக்களின் வரிப் பணத்திலிருந்து ஆகும். எனவே பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து அரசு மேற்கொள்ளும் நடிவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் அறிந்து கொள்ளும் உரிமை பொதுமக்களுக்கு சட்ட ரீதியாக உள்ளனதென மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருந்தி பயிற்சி நிலையத்தில் 17.01.2018 அன்று அரச உத்தியோகத்தர்களுக்கான தகவல் அறியும் சட்டப் பயிற்சியானது உதவி ஆணையாளர் கே. வி. தங்கவேல் தலைமையில் இடம்பெற்ற போது வளவாளராக கலந்து கொண்ட அஸீஸ் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது,

2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் அறிந்து கொள்வதன் நோக்கமாக, அடிப்படை உரிமைகளின் பாதுகாப்புத்தன்மை, ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி திறன்மிக்கதாக செயற்படுத்தல், அரசின் வெளிப்படைத்தன்மை மற்றும் கலந்துரையாடலின் அடிப்படையில் அபிவிருத்தி என்பவைகளை சிறப்பாக செய்ய முடியும்.

தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் ஊடகங்கள் தடையின்றி சமுகத்தில் நடைமுறைப்படுத்தப்படல் முடியும். இதில் ஊடகங்கள் சுதந்திரமாகவும் தலையீடு அற்ற விதமாகவும் செயற்படவேண்டுமென்பது முக்கியத்துவம் பெறுகிறது. தகவல்களை வெளி;ப்படுத்துதல் தொடர்பில் மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சகல தகவல்களையும் பெற்றுக் கொள்ளக்கூடிய இலகுவான ஊடகங்கள் மூலம் மக்களுக்கு வழங்குவதற்கான பொறுப்பு அரச நிறுவனங்களிடம் காணப்படல் வேண்டும்;. அத்துடன் மக்கள் இலகுவாகப்; புரிந்து கொள்ளக்கூடியவாறு ஏற்புடைய தகவல்களை வழங்குதல் தகவல் அதிகாரியின் பொறுப்பாகும்.

பிரஜையொருவர் தகவவலை பெற்றுக் கொள்வதற்கான எழுத்துமூலமான விண்ணப்பத்தை தகவல் அதிகாரிக்கு முன்வைக்கும் போது அதனை கட்டணமின்றி தகவல் அதிகாரி விண்ணப்பத்தினை சரிபார்த்து பூர்த்தி செய்தல் வேண்டும். விண்ணப்பம் கிடைக்கப்பெற்றதும் தகவல்களை வழங்குதல், நிராகரித்தல், மற்றும் அறவிடப்படும் கட்டணங்கள் 14 நாட்களுக்குள் அறிவித்தல் வேண்டும்.

தீர்மானித்த கட்டணத்தை பெற்றுக்கொண்டு 14 நாட்களுக்குள் தகவல்களை வழங்குதல் அல்லது 14 நாட்கள் போதாமல் இருந்தால் மேலும் 21 நாட்கள் நீடித்தல் செய்ய முடியும். தகவல்களை வழங்குவதை தகவல் அதிகாரி நிராகரித்தால் அதற்காண காரணம் பற்றி பிரஜைக்கு அறிவித்தல் மிக முக்கியமாகும். பெயர் குறிப்பிட்ட தகவல் அதிகாரி நிராகரித்தால்;; அல்லது 21 நாட்களுக்குள் மனுக்கான தீர்மானம் வழங்காதபட்சத்தில் இரண்டு மாதங்களுக்குள் தகவல் ஆணைக்குழுவிற்கு மனுச் செய்ய முடியும். ஆணைக்குழு 30 நாட்களுக்குள் அது தொடர்பான தீர்ப்பினை வழங்கும்.

சட்டத்தின் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ள தகவல்கள் வழங்குவதன் அடிப்படையில் எந்தவொரு அதிகாரிக்கும் வழக்குத் தொடர்தல், தண்டனைகளுக்கு உற்படுத்துதல், அல்லது ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. அத்துடன் தகவல்களை வழங்குவதற்கு தடையாக இருத்தல், பொய்யான தகவல்களை வழங்குதல், தகவல்கiளை அழித்தல் மற்றும் ஆணைக்குழுவிற்கு தடையாக இருத்தல் ஐம்பதினாயிரம் தண்டப்பணம் அல்லது இரண்டு வருட சிறை தண்டனை வழங்குவதற்கான ஏற்பாடும் உள்ளது என மேற்கண்டவாறு அஸீஸ் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது நிகழ்வு ஏற்பாட்டாளரான எம்.எம்.ஏ. சாகிர் அரச அதிகாரிகளின் பொறுப்புக்கள் பற்றியும் கருத்துரை வழங்கினார். 







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -