அகமட் எஸ். முகைடீன்-
மருதமுனை அல் ஹிக்மா கனிஷ்ட பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா 2018 இன்று (25) வெள்ளிக்கிழமை அப்பாடசாலை அதிபர் எம்.எல். மஹ்ரூப் தலைமையில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப், ஸம்ஸ் மத்திய கல்லூரி அதிபர் ஏ.எல். சகாப், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மருதமுனை முக்கியஸ்தகர் சட்டத்தரணி அன்சார் மௌலானா, அந்-நஹ்ழா அரபுக் கல்லூரியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். பதுருதீன், சுகாதார பரிசோதகர் அப்பாஸ் எம். நியாஸ், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சரின் பொதுசன தொடர்புகள் அதிகாரி எம்.எஸ். அலிகான் ஸாபி, இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா மற்றும் அல் ஹிக்மா கனிஷ்ட பாடசாலை பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது தரம் ஜந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 19 மாணவர்களுக்கு பணப்பரிசு மற்றும் நினைவுச் சின்னம் உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு கற்பித்த ஆசிரியர்களுக்கும் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.
மேலும், விபத்துக்குள்ளாகி காலில் உபாதை ஏற்பட்டிருந்த நிலையில் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றி குறித்த பாடசாலையில் அதி கூடிய 188 புள்ளிகளைப் பெற்ற என்.யூ. பாத்திமா சஸ்மினை பாராட்டி கிறீடம் அணிவித்து விஷேட நினைவுச் சின்னம் வழங்கிவைக்கப்பட்டது.
அத்தோடு 300 ஆங்கில சொற்களை மனனமிட்டு ஒப்புவிக்கும் 'ஸ்பல் மாஸ்டர்' போட்டியில் 90 இற்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் அணிவித்து சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இராஜாங்க அமைச்சர் ஹரீஸினால் அல் ஹிக்மா கனிஷ்ட பாடசாலையின் பெயர்ப் பலகை உள்ளிட்ட நுழைவாயில் கோபுரம் திறந்துவைக்கப்பட்டது.
கடந்தமுறை வெளியாகிய புலமைப் பரிசில் பரீட்சை முடிவின் சித்தியடைந்த மாணவர்களின் விகித கணிப்பீட்டிற்கமைவாக மருதமுனை அல் ஹிக்மா கனிஷ்ட பாடசாலையானது கல்முனை கல்வி வலயத்தில் முதலிடம் பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.