கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் புதிய அதிபராக யூ.எல்.எம் அமீன் கடமையினை பொறுப்பேற்றார் .

எம்.என்.எம்.அப்ராஸ்-
ல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் புதிய அதிபராக கல்முனை அல் மிஸ்பா மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் யூ.எல்.அமீன்(SLPS-1) அவர்கள் இன்று 02 தனது கடமைகளை பொறுப்பேற்றார்
அண்மையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரியின்அதிபர் வெற்றிடத்திற்காக நடத்தப்பட்ட நேர்முக பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டதையடுத்தே இந் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

1987ஆம் ஆண்டு இலங்கை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட இவர் பலாங்கொடை தமிழ மகா வித்தியாலயம் சாய்ந்தமருது மழஹருஷ்ஸம் மகா வித்தியாலயம் ஆகியவற்றிலும் ஆசிரியராகக்கடமையாற்றியுள்ளார்.அத்துடன் கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் நீண்ட காலம் பிரதி அதிபராகவும் அதிபராகவும் கடமையாற்றியுள்ள இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் கல்வியியல் முதுமாணி டிப்ளோமாவையும் பூர்த்தி செய்துள்ளார் . மேலும் இவர் இலங்கை அதிபர் சேவையில் முதலாம் தரத்தை சேந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் இலங்கையின் புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவரான சோலைக்கிளி அதீகின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ் நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்காளான எம்.ஐ.எம். மனாப் ,ஏ.எம். பைரூஸ் மற்றும் பாடசாலை உதவி, பிரதிஅதிபர்கள் ,ஆசிரியர்கள் ,நலன்விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -