உலக நீரிழிவு தினத்தையொட்டி கடந்தாண்டு இலங்கை நீரிழிவு ஒன்றியம் நாடளாவியரீதியில் நடாத்திய பாடசாலை சுகாதார செயற்றிட்டப்போட்டியில் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை வலய ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகாவித்தியாலயம் வெற்றிபெற்றுச்சாதனை படைத்துள்ளது.
இதற்கான பரிசளிப்பு விழா கடந்த சனிக்கிழமை கொழும்பு தாமரைத்தடாக அரங்கில் நடைபெற்றது. சுகாதார அமைசச்ர் டாக்டர் ராஜிதசேனரத்னா இப்பரிசை வழங்கிவைத்தார்.
தேசியரீதியில் இப்பாடசாலை 5ஆம் இடத்தைப் பெற்றது. 5000ருபா பணப்பரிசும் வழங்கப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை வலய ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகாவித்தியாலயம் மட்டும் இப்போட்டியில் வெற்றிபெற்றுச்சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி நிறுவன தலைவர் டாக்டர் மனில்கா சுமனதிலக இந்தப்பெறுபேறை பாடசாலை அதிபர் எம்.விஜயகுமாரனுக்கு அறிவித்திருந்தா
சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் இச்சாதனைக்காக அதிபர் ஆசிரியர் மாணவர்களை பாராட்டியுள்ளார்.
அதேவேளை தேசிய மட்ட சிறந்த அறிக்கையில் போட்டியிலும் இப்பாடசாலை வெற்றிபெற்றுச்சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.