மாவனெல்லை பதுரியா பழைய மாணவர்கள் (1991/63) ஏற்பாட்டில், வறிய மாணவர்களுக்கு புலமைப்பரிசில் திட்டம்

மாவனெல்லை பதுரியா மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் அமைப்பான (1991/63) வறிய மாணவர்களுக்கு புலமைப்பரிசில் திட்டம் ஒன்றை அங்குரார்ப்பணம் செய்துள்ளது. மானவெல்லை பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் 05 பாடசாலைகள் முதற்கட்டமாக இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன.
இதில், தனாகம முஸ்லிம் மகா வித்தியாலயம், கனேத்தன்ன முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம், தெல்கஹகொட மதீனா முஸ்லிம் மகா வித்தியாலயம், நாகுருகம முஸ்லிம் மகா வித்தியாலயம், ஹோங்கமுவ சிங்கள மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் 05ஆம் ஆண்டும் கல்வி பயிலும் வறிய மாணவர்களுக்கே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக பாடசாலையின் முன்னாள் அதிபர் அல்ஹாஜ். ஏ.சி.எஸ்.ஏ ஹாஜா முகைதீன் அவர்களும் கெளரவ அதிதிகளாக தற்போதைய அதிபர் நிஸ்தார் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர், பழைய மாணவர் சங்கச் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வுக்கு சமாந்திரமாக 1991/63 பழைய மாணவர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 06 பேர் கொண்ட மென்பந்து சுற்றுப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு கேடயங்களும், பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பாடசாலைகள் அபிவிருத்திச்சங்க உறுப்பினர்களும், பழைய மாணவர் சங்கத்தின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டதாக பழைய மாணவர் சங்க ஸ்தாபக உறுப்பினர் முஹம்மட் தஸ்லீம் தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -