2கோடியே 44இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் அபிவிருத்தி


எஸ்.அஷ்ரப்கான்-
றாவூர் ஆதார வைத்தியசாலை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகியவற்றின் புனர்நிர்மானப் பணிகளுக்காக கிழக்கு மாகாண ஆளுநரினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவருமான எம்.எஸ்.சுபைர் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்தே குறித்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைவாக ஆதார வைத்தியசாலை மற்றும் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகியவற்றுக்கு சுமார் 2கோடியே 44இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியின் இரண்டாம் கட்ட வேலைக்காக 1கோடியே 61இலட்சம் ரூபா நிதியும், வெளிநோயாளர் பிரிவு கட்டிடம் மற்றும் நிர்வாகக் கட்டிடத்திற்கும் 50இலட்சம் ரூபா நிதியும், வைத்தியசாலையின் சமயலறை புணர்நிர்மாணத்திற்கு 21இலட்சம் ரூபா நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..
இதேவேளை, ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 12இலட்சம் ரூபா நிதியும் கிழக்கு மாகாண ஆளுநரால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதியின் மூலம் வைத்தியசாலையின் குறைபாடுகள் சில நிவர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த வைத்தியசாலையானது எம்..எஸ்.சுபைர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -