கொடகே நிறுவனத்தினால் நடத்தப்பட்ட 2018 ஆம் ஆண்டுக்கான சிங்கள் .தமிழ் மொழியிலான கையெழுத்துப் போட்டியில் தெரிவு செய்யப்பட்ட, நூல்களுக்கான பரிசளிப்பு விழா கடந்த பிப்ரவரி 15ந்ந்திகதி பிற்பகல் 3.00 மணிக்குக் கொழும்பு மகாவலி கேந்திர நிலைய அரங்கில் நடைபெற்றது.
வரவேற்புரையை உபாலி லீலாரட்ன நிகழ்த்தினார். பரசிசு பெற்ற நூல்களின் தெரிவை சிங்கள எழுத்தாளர் அனுர ஹெட்டிகே அறிவித்தார். இந்த நிகழ்வில் பேராசிரியர் குசுமா கருணரத்தன. மேமன்கவி ஆகியோர் சிறப்புரைகள் ஆற்றினார்கள்.
இவ்விழாவில் 2018 ஆம் நடத்த போட்டியில் தெரிவுச் செய்யப்பட்ட சிங்கள மொழி நூல்களுடன், தமிழில் சிறந்த நாவலாக தெரிவுச் செய்யப்பட்ட மன்னார் எஸ்.ஏ. உதயனின் '' அலுவாக்கரை'' சிறந்த சிறுகதைத் தொகுதியாக செய்யப்பட்ட தங்கராசா செல்வகுமாரின் ''நாட்குறிப்பு'' சிறந்த கவிதைத் தொகுப்பாக செய்யப்பட்ட சப்னா செய்னுல் ஆப்தீனின் '' சமுத்ராவும் அவள் இசைக்கும் புல்லாங்குழலும்'' ஆகிய நூல்களுக்கான விருதுகளும் ,பணப்பரிசிலும். சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. சிங்களத்திலும் தமிழிலும் ஹேமசந்திர பதிரன நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -