கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வுகள் சென்ற புதன்கிழமை (30) பாடசாலை மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது.
போட்டி முடிவுகளின் படி நஜும் இல்லம் 500 புள்ளிகளைப்பெற்று முதலாவது இடத்தையும் ,ஷம்ஸ் இல்லம் 469 புள்ளிகளைப்பெற்று இரண்டாவது இடத்தையும் ,கமர் இல்லம் 460 புள்ளிகளைப்பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நஜும் இல்லம் இந்த வருடமும் சம்பியனானதை தொடர்ந்து தொடராக மூன்று வருடங்கள் சம்பியன் அணியாக வெற்றியீட்டியிருப்பது விசேட அம்சமாகும். இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் விஷேட அதிதிகளாக கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் உள்ளிட்ட பிரதேச அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். உத்தியோகபூர்வ அதிதிகளாக கம்பஹா வலயக் மேலதிக கல்விப் பணிப்பாளர் அஜித் விஜேசுந்தர மற்றும் அதிகாரிகள், பிரதேச ஏனைய பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பெரும் திரளானோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.