இவ் ஆசிரியர்களுக்கு கடந்த 8 வருடங்களுக்கு மேலாக 3000 ரூபாய் வீதம் மாதாந்த சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.இச் சம்பளம் தமக்கு போதாமை தொடர்பாக முன்பள்ளி ஆசிரியர்கள் ஆளுநருக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக திறைசேரி,மாகாண கல்வியமைச்சு , நிதி அமைச்சு போன்றவற்றுடன் கலந்துரையாடியதன் பின்னர் அனைவரினதும் இணக்கத்துடன் இவ் ஆசிரியர்களின் மாதாந்த சம்பளத்தினை 3000ரூபாயில் இருந்நு முதல் 4000ரூபா வரை உயர்த்தி வழங்க கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண கல்வியமைச்சுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கமைவாக எதிர்வரும் மார்ச் மாதத்திம் முதலாம் திகதியிலிருந்து இவ் முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் 4000மாக உயர்த்தி அவர்களுக்கான வேதனம் வழங்கப்படவுள்ளது.கிழக்கு மாகாணத்தில் யுத்த நிலையில் பாதிக்கப்பட்ட இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்டு பல்வேறுபட்ட கஸ்டங்களுக்கு மத்தியில் நீண்டதூரம் பயணித்து தங்களது பணிகளை செய்து வருகின்றன ஆசிரியர்களின் வேதனத்தோடு இவர்கள் தொடர்பான இன்னும் பல நடவடிக்கைகளை எடுக்கைகளை எடுப்பதாகவும் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
அத்துடன் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் அவர்களுக்கான பொது வேலைத்திட்டம் ஆசிரியர்களுக்கான மேலதிக பயிற்சிகளை வழங்குமாறு கல்வியமைச்சுக்கு ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் பணிப்புரை விடுத்துள்ளார்.