கண்டியில் 38 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-

தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் மூலம் கண்டி மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள குடிநீர் வழங்கல் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று (09) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்டுகஸ்தோட்டை, வெகாகொட தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

இத்திட்டத்தின் மூலம் கண்டி மாவட்டத்தில் 116 கிராமங்களை உள்ளடக்கியதாக 38 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. 380.7 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தின் மூலம் 11,302 குடும்பங்களைச் சேர்ந்த 51,635 பேர் நன்மையடையவுள்ளனர்.
இக்கலந்துரையாடலில் சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெயதில ஹேரத், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவர் எம்.எச்.எம். சல்மான், செயலாற்றுப் பணிப்பாளர் மஹிலால் டி. சில்வா, பிரதி பொது முகாமையாளர் மீகொட மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை செயற்படுத்தும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -