பழுலுல்லாஹ் பர்ஹான்-
இலங்கை திருநாட்டின் 71வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் ஏற்பாட்டில் 'உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் ' எனும் தொனிப்பொருளில் கடந்த 4ம் திகதி திங்கட்கிழமை காத்தான்குடி தள வைத்தியசாலையில் இரத்ததான முகாம் ஒன்று இடம்பெற்றது.
சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் தலைவர் எம்.ஏ.சீ.எம். ஜெலீஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி இரத்ததான முகாமை ஆரம்பித்து வைக்கின்ற விஷேட நிகழ்வில் காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர்,காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிஷாந்த பிரபாத் கஸ்தூரி ஆராச்சி,காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்ஸா, காத்தான்குடி தள வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் உமா சங்கர் உட்பட வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரிகள், சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் இரத்ததான முகாமை ஆரம்பித்து வைத்தனர்.
இதன் போது காத்தான்குடி தள வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் உமா சங்கரினால் பரிசோதிக்கப்பட்ட ஆண்கள்,பெண்கள் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கினர்.
சுதந்திர தினத்தன்று முதற்தடவையாக காத்தான்குடி தள வைத்தியசாலையில் இடம்பெற்ற குறித்த இரத்ததான முகாமில் 55 பேர் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.