தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) 71வது தேசிய சுதந்திர தின நிகழ்வும், மரநடுகை நிகழ்வும் சாய்ந்தமருது - 14 அஹமட் வீதியில் அமைந்துள்ள பிரிலியன்ட் பாலர் பாடசாலையில் நாளை (04) திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.
நுஜா ஊடக அமைப்பின் தேசியத் தவிசாளர் றியாத் ஏ.மஜீத் நெறிப்படுத்தலில் நுஜா ஊடக அமைப்பின் தேசியத் தலைவர் எஸ்.எம்.அறூஸ் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளரும், மூலோபாயங்கள் அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ர விரிவுரையாளரும், உத்தியோகத்தர் அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளருமான கலாநிதி றமீஸ் அபூவக்கர், உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ.பாவா, வர்த்தக கைத்தொழில நீண்டகால இடம்பெயர்வு, மீள்குடியேற்ற மற்றும் உணவு கூட்டுறவுத்துறை அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.எம்.ஜூனைதீன், நஜாத் கன்ஸ்ரக்ஷன் பணிப்பாளர் ஏ.எல்.நஜிமுதீன், வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர் எம்.ஆர்.எம்.நௌபல், தொழிலதிபர், சமூக சேவையாளர் எம்.எச்.நாசர் உள்ளிட்ட பிரிலியன்ட் பாலர் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
நிகழ்வில் ஊடகப்பணிக்காக கொலை செய்யப்பட்ட மற்றும் மரணித்த ஊடகவியலாளர்கள் மற்றும் நாட்டுக்காக உயிர் தீர்த்த படையினருக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி, வீட்டுக்கு வீடு பலன் தரும் மரக்கன்று நடுதல் மற்றும் சுதந்திர தினத்தின் முக்கியத்துவம் எனும் தொனிப்பொருளில் விசேட உரை என பல்வேறு நிகழ்வுகளுடன் ஏற்பாடுகள் கோலாகலமாக செய்யப்பட்டுள்ளதாக நுஜா ஊடக அமைப்பின் பொதுச் செயலாளர் பைசல் இஸ்மாயில் தெரிவித்தார்.