இலங்கையின் 71வது சுதந்திர தினத்தையொட்டி பாலமுனை சுப்பர் ஓக்கிட் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் மரநடுகை மற்றும் சிரமதான நிகழ்வுகளும் வாகனங்கள் பொது இடங்களில் தேசியக் கொடியினை காட்சிப்படுத்தும் நிகழ்வுகளும் நேற்று (4) திங்கட்கிழமை கழகத்தின் தலைவர் எம்.எச்.நிஸார்தீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எச்.எம்.சிறாஜ், ஜூம்ஆப் பள்ளிவாயல் தலைவர் ஏ.உதுமாலெவ்வை, பிரதி அதிபர் பி. முஹாஜிரீன், உபதலைவர் எச்.எம். அன்சார், செயலாளர் கே.எல். ஹர்ஸான், பொருளாளர் ஏ.அதுஹான் உள்ளிட்ட கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.