தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) 71வது தேசிய சுதந்திர தின நிகழ்வும், மரநடுகை நிகழ்வு

எஸ்.அஷ்ரப்கான்,எம்.என் எம்.அப்ராஸ்-
தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) 71வது தேசிய சுதந்திர தின நிகழ்வும், மரநடுகை நிகழ்வும் சாய்ந்தமருது - 14 அஹமட் வீதியில் அமைந்துள்ள பிரிலியன்ட் பாலர் பாடசாலையில் இடம்பெற்றது. "தேசிய உணர்வை மதிப்பளிக்க வேண்டும்"எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது.

நுஜா ஊடக அமைப்பின் தேசியத் தவிசாளர் றியாத் ஏ.மஜீத் நெறிப்படுத்தலில் நுஜா ஊடக அமைப்பின் தேசியத் தலைவர் எஸ்.எம்.அறூஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளரும், மூலோபாயங்கள் அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ர விரிவுரையாளரும், உத்தியோகத்தர் அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளருமான கலாநிதி றமீஸ் அபூபக்கர்
வர்த்தக கைத்தொழில் நீண்டகால இடம்பெயர்வு, மீள்குடியேற்ற மற்றும் உணவு கூட்டுறவுத்துறை அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.எம்.ஜூனைதீன் மற்றும்சமூக சேவையாளர் எம்.எச்.நாசர் உள்ளிட்ட பிரிலியன்ட் பாலர் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
மேலும் விசேடமாக ஊடகப்பணியின் போது கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் நாட்டுக்காக உயிர் நீர்த்த படையினருக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -