ஒரு கிலோ சம்பாவை 85 ரூபா உச்ச வரம்பிற்கு விநியோகிக்க இணக்கம்


ஐ. ஏ. காதிர் கான்-
ப்ரல் மாதம் ஆரம்பமாகும் பண்டிகைக் காலத்துடன் இணைந்ததாக, ஒரு கிலோ சம்பாவை 85 ரூபா என்ற உச்ச வரம்பிற்கு உட்பட்டவாறு விநியோகிக்க, நெல் ஆலை கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.
இலங்கையின் முன்னணி ஆலை உரிமையாளர்கள் மற்றும் சிறிய அளவிலான ஆலை உரிமையாளர்கள் ஆகியோருடன் விவசாய அமைச்சு அதிகாரிகள் கடந்தவாரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன்போதே, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது. அமைச்சர் பீ.ஹரிசன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் ஒரு கிலோ நெல்லின் விலையைப் போன்று, இருமடங்கு விலைக்கு அரிசியை விநியோகிக்கவும் ஆலை உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்னர். இந்தக் கூட்டத்தில், பெரும்போக அறுவடை நெல்லை விலை கொடுத்து வாங்கும் நடைமுறையில் அரசாங்கத்தின் உத்தரவாத விலைப்பட்டியலைத் தத்தமது களஞ்சியசாலைகளில் காட்சிப்படுத்தவும், ஆலை உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
இதன் பிரகாரம், ஒரு கிலோ சம்பா நெல் 41 ரூபாவிற்கும், ஒரு கிலோ நாட்டரிசி நெல் 38 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -