சாய்ந்தமருதின் முதிசங்களான பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகம் இலங்கை திருநாட்டின் 71 வது சுதந்திர தினத்தையொட்டி சாய்ந்தமருது பொலிவேரியன் பொது விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் 4 ஆம் திகதி திங்கட்கிழமை காலை பல நிகழ்வுகளை ஒழுங்கு செய்துள்ளன
சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் சிரேஸ்ட ஆசிரியரும் கழகத்தின் ஸ்தாபக உறுப்பினருமான எம்.ஐ.எம்.அஸ்ஹர் தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி நிகழ்வில் கழகத்தின் தவிசாளர் மோட்டார் போக்குவரத்து பிரதம பரிசோதகர் பொறியியலாளர் ஏ.எல்.எம்.பாறூக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இலங்கை திருநாட்டின் தேசிய கொடியினை ஏற்றி வைப்பதனை தொடர்ந்து 71வது சுதந்திரதின நினைவான மைதானத்தைச் சுற்றிவர நிழல்தரும் மரங்கள் நாட்டி வைக்கப்படவுள்ளன.
அன்றைய தினம் சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்களுக்கிடையே கண்காட்சி கிறிக்கட் போட்டியொன்றும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.