துறை முகங்களை அபிவிருத்தி செய்வதன் ஊடாக அதிக அந்நிய செலவாணிகளை ஈட்டிக் கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (08) கொழும்பில் உள்ள துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அலுவலகத்தில் இடம் பெற்றது.
குறித்த கலந்துரையாடலானது துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஹரூப் மற்றும் வர்த்தக வாணிப கைத்தொழில், கூட்டுறவுத் துறை நீண்ட காலம் இடம் பெயர்ந்தோரை மீளக்குடியேற்றல் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவருமான ரிசாத் பதியுதீன் ஆகியோர்கள் பங்கேற்ற குழுவினர் தலைமையில் இடம் பெற்றது.
ஒலுவில் துறை முகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள், திருகோணமலை துறை முக அபிவிருத்தி ,சர்வதேச நாடுகளுடனான வர்த்தக உடன் படிக்கைகள் உள்ளிட்ட துறை முகங்களை அபிவிருத்திக்கு பிரதானமாக இட்டுச் செல்லக் கூடிய வழி வகைகளையும் தேசிய கொள்கை திட்டமிடல் அமுலாக்கத்தை மேற்படுத்தல் போன்றன விசேடமாக தீர்வாக எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் துறை முக அபிவிருத்திகள் ஊடாக இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்தல் சர்வதேச மட்டத்திலான உறவுகளை வலுப்படுத்துவதன் ஊடாக வருமானமீட்டல் எவ்வாறாக அமையப் பெறவேண்டும் என்பது மிக முக்கிய விடயமாக கொள்ளப்படுகிறது.
ஒலுவில் துறை முக பிரச்சினைகளை தீர்த்து சரியான முடிவுகளை விரைவில் முன்வைக்கக் கூடிய வாய்ப்புக்களை ஏற்படுத்துவதாகவும் துறை முகங்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு துரிதமான அபிவிருத்திக்கு இட்டுச் செல்லப்படும் என பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் இதன் போது கூறினார்.
>
> குறித்த இக் கலந்துரையாடலில் அம்பாறை மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் வீ.சி இஸ்மாயில்,துறை முக அதிகார சபையின் பொறியியலாளர் நௌபர், முன்னால் அட்டாளைச் சேனை பிரதேச சபை தவிசாளர் அன்சில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
>
> குறித்த இக் கலந்துரையாடலில் அம்பாறை மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் வீ.சி இஸ்மாயில்,துறை முக அதிகார சபையின் பொறியியலாளர் நௌபர், முன்னால் அட்டாளைச் சேனை பிரதேச சபை தவிசாளர் அன்சில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.